A man holding his head with closed eyes and dizziness reflects symptoms of epilepsy.

வலிப்புப் பாதிப்பின் சிகிச்சை முறைகளை அறிவோமா?

வலிப்பு நோய் ஒரு நரம்பியல் பாதிப்பு ஆகும். இது சர்வதேச அளவில் 65 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களைப் பாதிக்கிறது. இது பொதுவாக, பெரியவர்களைவிட குழந்தைகளிலேயே அதிகம் காணப்படுகிறது. மூளைப் பகுதியில் ஸ்கேன் மற்றும் நரம்பியல் பாதிப்பின் அறிகுறிகளைச் சரிபார்க்கத் தொடர்ச்சியான பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளைப் பயன்படுத்தி கண்டறியப்படுகிறது. வலிப்புப் பாதிப்பு உள்ளவர்களுக்கு, வலிப்புத் தாக்கங்களைக் கட்டுப்படுத்த மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. வலிப்பு நோய்ப்பாதிப்பிற்கான அறிகுறிகள், காரணங்கள், பல்வேறு சிகிச்சை விருப்பங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக விளக்குகிறது.

வலிப்பு நோய்ப்பாதிப்பு என்பது, மூளையின் மத்திய நரம்பு மண்டலத்தைப் (CNS) பாதிக்கும் நரம்பியல் பாதிப்பு ஆகும். இதன் விளைவாக, மக்கள் மீண்டும் வலிப்புத்தாக்கங்களை அனுபவிக்கின்றனர். அவை மூளையில் கட்டுப்பாடற்ற, திடீர் மின் செயல்பாட்டின் வெடிப்புகள், அதிர்ச்சி அல்லது தலையில் ஏதேனும் காயம் ஏற்பட்டவர்களுக்கும், வலிப்புப் பாதிப்பு உருவாகும் ஆபத்துகள் அதிகம்.

வலிப்புப் பாதிப்பின் அறிகுறிகள் என்ன?

வலிப்பு நோய்ப்பாதிப்பின் அறிகுறிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலானது ஆகும். அறிகுறிகளை முழுமையாக அறிந்துகொள்வது, நிலைமையை முன்கூட்டியே கண்டறிய உதவும்.

குவிய (பகுதி) வலிப்புத்தாக்கங்கள்

இது மூளையின் குறிப்பிட்ட பகுதியைப் பாதிக்கிறது மற்றும் கட்டுப்பாடற்ற மின் சமிக்ஞைகளை அனுப்புவதற்கு, இன்றியமையாததாக உள்ளன.

அறிகுறிகள்

  • தலைச்சுற்றல்
  • வாசனை, தொடுதல், சுவை, பார்வை மற்றும் கேட்டல் போன்ற புலன்களில் ஏற்படும் மாற்றங்கள்
  • கை மற்றும் கால்களின் கூச்ச உணர்வு

பொதுவான வகையிலான வலிப்புத்தாக்கங்கள்

மூளையின் வலது மற்றும் இடது பெருமூளை அரைக் கோளங்களை, ஒரே நேரத்தில் பாதிக்கிறது. பொதுவான வலிப்புத் தாக்கங்கள் மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

அறிகுறிகளின் வகைகள்

ஆப்சென்ஸ் வலிப்புத்தாக்கங்கள் – கண் சிமிட்டுதல், விழிப்புணர்வு இல்லாமை.

டோனிக் வலிப்புத்தாக்கங்கள் – தசைகள் பலவீனம் அடைதல் மற்றும் மோசமான தசை இயக்கங்கள்.

அடோனிக் வலிப்புத்தாக்கங்கள் – நிலைகுலைந்து கீழே விழுதல், தசைகளின் கட்டுப்பாட்டை இழத்தல், சில நேரங்களில் சரிவுக்கு வழிவகுக்கிறது.

குளோனிக் வலிப்புத்தாக்கங்கள் – உடல் இழுப்பு இயக்கங்களில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. கைகள், கழுத்து, முகப்பகுதிகளைப் பெரிய அளவில் பாதிக்கிறது.

மயோனிக் வலிப்புத்தாக்கங்கள் – வலிப்பு செயல்பாடுகள் அல்லது திடீர்த் திடீரென்று இழுப்பு உணர்வுகள் ஏற்படுதல்.

டோனிக் – குளோனில் வலிப்புத்தாக்கங்கள் – இது முன்னதாக, கிராண்ட் மால் வலிப்புத்தாக்கங்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தன. தசைகளில் ஏற்படும் விறைப்பு உணர்வு, சுயநினைவு இல்லாத நிலை, குடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த இயலாத உடல் மற்றும் சிறுநீர்ப்பையின் இயக்கங்களில் தொய்வு உள்ளிட்டவை, வலிப்பு நோய்ப்பாதிப்பின் அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன.

உணர்வுகள் இழப்பு, மனநிலையில் மாற்றம், உடலின் செயல்பாடுகளில் இடையூறுகள். வாசிப்பு நிகழ்வில் சுணக்கங்கள், எதிலும் போதிய கவனம் செலுத்த இயலாத நிலை, கற்றல் குறைபாடு உள்ளிட்ட நிகழ்வுகளும், வலிப்பு நோய்ப்பாதிப்பின் பொதுவான அறிகுறிகளாகக் குறிப்பிடப்பட்டு உள்ளன.

வலிப்புப் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?

தலைப்பகுதியில் காயங்கள் ஏற்பட, விபத்துக்கள் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளது போன்று, வலிப்புப்பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள், கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.

  • மரபணுக் குறைபாடு
  • மூளைப்பகுதியில் கட்டி
  • தலையில் திடீரென்று ஏற்படும் அதிர்ச்சி அல்லது மூளையில் காயம்
  • மூளைக்குப் போதிய ஆக்சிஜன் இல்லாத நிலை அல்லது பெருமூளை ஹைபோக்ஸியா
  • அல்சைமர் அல்லது டிமென்சியா பாதிப்பு நோயாளிகள்
  • குழந்தைப்பேறுக்கு முந்தைய மூளைப் பகுதியில் அதிர்ச்சி அல்லது காயங்கள்
  • வைட்டமின் அல்லது மினரல்கள் குறைபாடு
  • என்செபலிடிஸ் அல்லது மூளைக் காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுக்கள்
  • மூளையின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சேதத்தை ஏற்படுத்துகின்றன.

வலிப்பு நோய்ப்பாதிப்பின் காரணிகள் யாவை?

பல்வேறு காரணிகள், வலிப்புப் பாதிப்பைத் தூண்டுவனவாய் அமைந்து உள்ளன. வலிப்பு நோய்ப் பாதிப்பைத் தூண்டக்கூடிய சில காரணிகள் கீழே வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

  1. அதீதச் சோர்வு
  2. மதுவகைகளின் அதிகப்படியான பயன்பாடு
  3. போதிய உறக்கம் இல்லாத நிலை
  4. அதிக மன அழுத்தம்
  5. காஃபின் அதிகப்படியான நுகர்வு
  6. மருந்துகளை உட்கொள்தல்
  7. அதிகக் காய்ச்சல்
  8. குறைந்த ரத்த சர்க்கரை
  9. விபத்து அல்லது தலையில் காயம்
  10. சுற்றுச்சூழல் உள்ளிட்டவை வலிப்புப் பாதிப்பின் காரணிகள் ஆகும்.

வலிப்பு நோய்ப்பாதிப்பு எவ்வாறு கண்டறியப்படுகிறது?

ஒருவருக்கு வலிப்பு நோய்ப்பாதிப்பு இருப்பது கண்டறியப்படின், நரம்பியல் நிபுணரைக் கலந்தாலோசிப்பது நல்லது. ஏனெனில், அவர்கள் மூளையைப் பாதிக்கும் நிலைமைகளைக் கண்டறிவதில் நிபுணர்கள் ஆவர்.

வலிப்பு நோய்ப்பாதிப்பைக் கண்டறிய உதவும் சோதனைகள்

A professional prepares a patient for EEG brain testing to diagnose epilepsy.

EEG (எலெக்ட்ரோஎன்செபலோகிராம்)

வலிப்பு நோய்ப்பாதிப்பு இருப்பவருக்கு மூளைப் பிரச்சினைகள் அல்லது காயங்கள் உள்ளதா என்பதை அறிய EEG (எலெக்ட்ரோஎன்செபலோகிராம்) மற்றும் மூளை ஸ்கேனர் ஆகியவற்றை மேற்கொள்ள, மருத்துவ நிபுணர்ப் பரிந்துரைக்கிறார். EEG (எலெக்ட்ரோஎன்செபலோகிராம்) சோதனையின் போது, உச்சந்தலையில் சிறிய சென்சார்கள் இணைக்கப்படுகின்றன. அவை மூளைக்குத் தேவையான சமிக்ஞைகளை அனுப்புகின்றன மற்றும் மூளை நடவடிக்கைகளைப் பதிவு செய்கின்றன.

MRI ஸ்கேன்

இந்த ஸ்கேன் நடவடிக்கையானது, மூளையின் செயல்பாடு மற்றும் கட்டமைப்பைக் கண்டறிய உதவுகிறது. மூளைப்பகுதியில் ஏதாவது வடு அல்லது புண் இருப்பின், அதனால்கூட, வலிப்புப் பாதிப்பானது ஏற்படலாம்.

இவைகள் மட்டுமல்லாது, வலிப்பு நோய்ப்பாதிப்பின் நிலையைச் சரிபார்க்க வேறு சில சோதனைகளும் உள்ளன. அவைகளாவன

  • ஒற்றைப் ஃபோட்டான் உமிழ்வு கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி (SPECT) ஸ்கேன்
  • CT ஸ்கேன்
  • பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி (PET ) ஸ்கேன் போன்றவைகள் உள்ளன.

மேலும் வாசிக்க : பெண்களுக்கு ஏற்படும் வலிப்பு குறித்து அறிவோமா?

வலிப்பு நோய்ப்பாதிப்பிற்கு வழங்கப்படும் சிகிச்சைகள் என்ன?

வலிப்புப்பாதிப்பிற்கான எதிர்ப்பு மருந்துகள் (AED)

வலிப்பு நோய்ப்பாதிப்பிற்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் முதன்மையானதும் மற்றும் பயனுள்ள சிகிச்சையாக AED முறை விளங்குகிறது. இதில் டோபிராமேட், லாமோட்ரிஜின், சோடியம் வால்ப்ரோயேட் உள்ளிட்ட மருந்துகள் உள்ளடங்கி உள்ளன. இத்தகைய மருந்துகள், வலிப்புத்தாக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

வலிப்புப்பாதிப்பிற்கான எதிர்ப்பு மருந்துகளின் உதவியுடன், மூளையின் வேதியியல் அளவை மாற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. இந்தச் சிகிச்சை முறையானது, வலிப்புப் பாதிப்பைக் குணப்படுத்தாது என்றபோதிலும், வலிப்புத்தாக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.

வேகஸ் நரம்பு தூண்டுதல் முறை

உடலில் வேகஸ் நரம்பு தூண்டுதல் எனும் சிறிய சாதனம் உட்செலுத்தப்பட்டு மூளையின் செயல்பாடுகள் மற்றும் உடலின் வலிப்புத்தாக்கங்களையும் கட்டுப்படுத்தவல்லச் செயல்முறை ஆகும்.

கீட்டோ உணவுமுறை

வலிப்புத்தாக்கங்களைக் கட்டுப்படுத்த வழக்கமான தினசரி உணவுமுறையில் கீட்டோ உணவு வகைகளைச் சேர்ப்பது, தாக்குதல்களைக் கட்டுப்படுத்த உதவும்.

மூளை அறுவைச் சிகிச்சை

வலிப்பு நோய்ப்பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள், அறுவைச் சிகிச்சைச் செய்யப் பரிந்துரைக்கப்படுகின்றனர். இதில் வலிப்புத்தாக்கங்களுக்குக் காரணமான மூளையின் சிறிய பகுதிகள் அகற்றப்படுகின்றன.

மேற்கூறிய வழிமுறைகள், சிகிச்சை முறைகளைக் கவனமாகப் பின்பற்றி, வலிப்பு நோய்ப்பாதிப்பில் இருந்து பூரண நலம் பெற்று, வளமான மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.