சுகாதாரத் துறையில் தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம்
பல்வேறு தருணங்களில், மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள் கூட, நம் உடல்நலப் பாதிப்புகளைக் குணப்படுத்த தவறியிருக்கும். இது உங்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும். உங்கள் குழப்பம் நியாயமானதுதான். சுகாதாரத்துறையில் மேற்கொள்ளப்படும் மருத்துவச் சேவைகள், நோயாளிகளின் தனிப்பட்ட மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறுகின்றன. இந்த நிலையை, நாம் எவ்வாறு சரிசெய்ய இயலும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்தபோது தான், தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவத்தின் பயன்பாடு, ஒரேசமயத்தில் திடீரென்று அதிகரித்தது. தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவமுறையானது, [...]