PTSD பாதிப்பிற்கு யாரிடம் உதவியைப் பெறுவது?
PTSD எனப்படும் பிந்தைய மன உளைச்சல் சீர்கேடு என்பது, ஒருவிதமான மன உளைச்சல் பாதிப்பு ஆகும். இது தீவிரமான நிகழ்வைக் கடந்து சென்றவர்கள் அல்லது அனுபவித்தவர்களைப் பாதிக்கக்கூடிய ஒருவித மனநல நிகழ்வு ஆகும். இங்கு தீவிரமான நிகழ்வுகள் என்பது பாலியல் ரீதியான தாக்குதல்கள், இயற்கைப் பேரிடர்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் அடங்கும்.சமீபத்திய ஆராய்ச்சியின்படி, மக்கள்தொகையில் 7-8% பேர் இப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்தப் பாதிப்பிற்கு, ஆண்களைவிட, பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகப் பயத்தையும் உணர்கின்றனர். இந்தப் பாதிப்பானது, நோயாளியின் வாழ்க்கைத்தரத்தில் அதிகளவிலான குறுக்கீட்டை ஏற்படுத்த கூடும்.
அறிகுறிகள்
PTSD எனப்படும் பிந்தைய மன உளைச்சல் சீர்கேடு பாதிப்பின் அறிகுறிகள், நபருக்கு நபர் வேறுபடுகின்றன. இந்தப் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
குழப்பமான சம்பவங்களின் ஆக்கிரமிப்புகள் மற்றும் வருத்தமளிக்கும் நினைவுகள் மற்றும் அதிர்ச்சிகளுடன் தொடர்புடைய கனவுகள்
யதார்த்தமான எதிர்வினைகள், எண்ணங்கள், உணர்வுகள், உரையாடல்களை நிகழ்வுடன் இணைத்தல்
அதிர்ச்சியைத் தூண்டக்கூடிய செயல்பாடுகள் மற்றும் இடங்களிலிருந்து விலகி இருத்தல்
உறக்கத்தில் பிரச்சினைகள், உறக்கமின்மையால் அவதிப்படுதல், மன அழுத்தம், எளிதில் அதிர்ச்சியாக உணர்தல், வழக்கமான எதிர்மறை எண்ணங்கள்
பழி, அவமானம், குற்ற உணர்வு
நினைவகச் சிக்கல்கள், நிகழ்வின் குறிப்பிட்ட விவரங்களை நினைவுபடுத்துவதில் சிரமம் உள்ளிட்டவைகளின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
யாருக்கெல்லாம் ஆபத்து?
அதிர்ச்சியை, நேரடியாக அனுபவித்தவர்கள்
மறைமுக அதிர்ச்சிக்கு உள்ளானவர்கள்
வரையறுக்கப்பட்ட சமூக அல்லது குடும்ப ஆதரவு உள்ளவர்கள்
மனநலப் பிரச்சினைகளைக் கொண்டவர்கள் உள்ளிட்டோருக்கு, பிந்தைய மன உளைச்சல் சீர்கேடு பாதிப்பு தீவிரமாக உள்ளது.
எப்போது, யாருக்கு உதவி தேவைப்படுகிறது?
பிந்தைய மன உளைச்சல் சீர்கேடு பாதிப்பின் அறிகுறிகள் தென்படத் துவங்கினால், தொழில்முறை நிபுணரின் உதவியை நாடுவது அவசியம் ஆகும்.
கவலைகள் பூதாகரமானதான மாறி, உங்கள் நம்பிக்கையைச் சீர்குலைக்கும்.
அறிகுறிகள் உங்கள் உறவுகளையும், வேலைகளையும் பாதிக்கத் துவங்குகின்றன.
நம்பிக்கையற்றவராக உணர்கிறீர்கள், முடிவுகளை எடுக்க முடியவில்லை, இதன்காரணமாக, வாழ்க்கையில் தீர்வே இல்லை என்பதை உணர்கிறார்கள்.
துயரத்தின் தீவிரம் காரணமாக, கடுமையான நடவடிக்கைகளாகக் கருதுபவர்கள் உள்ளிட்டோருக்கு, நிபுணரின் உதவியானது தேவைப்படுகிறது.
நிர்வகிக்கும் முறைகள்
தொழில்முறைச் சிகிச்சை
PTSD எனப்படும் பிந்தைய மன உளைச்சல் சீர்கேடு பாதிப்பை நிர்வகிப்பதில் முதன்மையான நடைமுறையாக, நிபுணரின் உதவியை நாடுவது ஆகும். அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை (CBT), கண் இயக்கம் உணர்திறன் நீக்கம் மற்றும் மறுசெயலாக்கம் (EMDR), நினைவாற்றல் அடிப்படையிலான நடைமுறைகள் உள்ளிட்டவைகளின் மூலம், பயனுள்ள சிகிச்சைகள் அமைகின்றன. பிந்தைய மன உளைச்சல் சீர்கேடு பாதிப்பைச் சமாளிக்க, ஆரோக்கியமான திறன்கள் அவசியம்.
சுய உதவி உத்திகள்
தொழில்முறையிலான சிகிச்சையைப் பூர்த்தி செய்யும் வகையில், சுய உதவி முறைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. சுறுசுறுப்பாக இருப்பது, பழக்கத்தில் உள்ள நடைமுறைகளைத் தொடர்வது, செயல்களில் நிதானமாக ஈடுபடுவது உள்ளிட்டவை, இந்தச் சுய உதவி உத்திகளில் அடங்கும். பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு பாதிப்பு உள்ளவர்களுக்கு, சுயப் பாதுகாப்பு மற்றும் சுய உதவி நடைமுறைகளைச் செயல்படுத்துவது முக்கியமானதாக உள்ளது.
சமூக ஆதரவு
பிந்தைய மன உளைச்சல் சீர்கேடு பாதிப்பை நிர்வகிப்பதற்கு, வலுவான சமூக ஆதரவானது மிக முக்கியமானதாக உள்ளது. இந்தச் சமூக ஆதரவானது குடும்பம், நண்பர்கள், அனுபவங்களைப் பகிரக்கூடிய வகையினர் உள்ளிட்டோரை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
மேலும் வாசிக்க : கவலை vs பீதி – வேறுபாடுகளை அறிவோமா?
ஆரோக்கியமான வாழ்க்கைமுறைத் தேர்வுகள்
சீரான உணவுமுறை, உடற்பயிற்சி பழக்கவழக்கம், போதிய அளவிலான உறக்கம் உள்ளிட்டவை, ஆரோக்கியமான நல்வாழ்விற்கு அடித்தளமிடுகின்றன. இந்த நற்பழக்கங்கள், பிந்தைய மன உளைச்சல் சீர்கேடு பாதிப்பிற்கான அறிகுறிகளையும் நிர்வகிக்க உதவுகின்றன.
PTSD நிர்வகித்தலில் உள்ள சவால்கள்
மனநலப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய களங்க உணர்வு கொண்டவர்கள், தனிநபர்களின் உதவியை நாடுவதைத் தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபரைச் சுற்றி உள்ளவர்கள், PTSD பாதிப்பின் அறிகுறிகளை அறிந்திருப்பார்கள் என்பது சந்தேகமே. இது பெரும்பாலும் சமூகத் தனிமைப்படுத்துதலுக்கு வழிவகுக்கின்றன.
பிந்தைய மன உளைச்சல் பாதிப்பானது மிகக் கடுமையானது என்றபோதிலும், அது தகுந்த சிகிச்சையின் மூலம் குணமாகக் கூடியது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். இந்தப் பாதிப்பின் அறிகுறிகளைச் சரியான நேரத்தில் அடையாளம் கண்டு, உரிய நிபுணரின் வழிகாட்டுதலின்படி சிகிச்சையை மேற்கொள்ளும்பட்சத்தில், இந்தப் பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணம் பெற்று, நிறைவான மற்றும் வளமான எதிர்காலத்தை அடைய இயலும்.