DNA – நமது வாழ்க்கையில் இதன் முக்கியத்துவம் என்ன?
உங்களுக்கு, தாயின் கண்கள் அல்லது தந்தையின் இசைச் சாமர்த்தியம் ஏன் உள்ளது என்று யோசித்து உள்ளீர்களா? அதேபோன்று, ஒரு சிலர் மற்றவர்களைவிட அதிகளவில் நோய்ப்பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதை அறிந்து உள்ளீர்களா? இதற்கான ஒரே விடை DNA என்பதே ஆகும்.
DNA என்றழைக்கப்படும் டியாக்ஸி ரிபோ நியூக்ளிக் அமிலமானது, வாழ்க்கைமுறைக்கான திறவுகோலைத் தனக்குள் வைத்திருக்கும், மூலக்கூறு ஆகும். இது உயிரினங்களின் மரபணுப் பொருள் எனப்படுகிறது. உயிரினங்களின் வளர்ச்சி, செயல்பாடுகள், இனப்பெருக்கம் உள்ளிட்டவைகளுக்குத் தேவையான வழிமுறைகளை, மரபணுக்கள் தன்னகத்தே கொண்டு உள்ளன.
DNA நாம் யார் என்பதையும், நம் தோற்றத்தில் இருந்து உடல் ஆரோக்கியம் வரை அதன் பங்களிப்பு என்ன என்பதை இந்தக் கட்டுரையின் மூலம் விரிவாக அறிந்து கொள்வோம்.!
DNA அல்லது டியாக்ஸி ரிபோநியூக்ளிக் அமிலம், உயிரினங்களின் வளர்ச்சி, செயல்பாடுகள், இனப்பெருக்கம் ஆகியவற்றுக்கான வழிமுறைகளைக் கொண்ட மூலக்கூறாகும். இது உடலின் அனைத்துச் செல்களிலும் காணப்பட்டு, பெற்றோரிடமிருந்து அவர்களின் குழந்தைகளுக்குக் கடத்தப்படுகிறது.
மரபணு மூலக்கூறின் முக்கியத்துவம்
ஒவ்வொரு மரபணுவும் நமது தோற்றம், நடத்தை, மற்றும் சுற்றுச்சூழல் பிரதிபலிப்புகளை நிர்ணயிக்கிறது.நாம் உயரமாக இருக்கிறோமா அல்லது குட்டையாக இருக்கிறோமா என்பதைத் தீர்மானிக்க, மரபணுக்கள் பேருதவி புரிகின்றன. நமது உணவு மற்றும் உடற்பயிற்சிக்கான பதில்களையும் மரபணுக்கள் தீர்மானிக்கின்றன.இதைத்தான் விஞ்ஞானிகள், மரபணு செல்வாக்கு என்று வரையறுக்கின்றனர். உடலின் அனைத்துச் செயல்பாடுகளையும், நிர்ணயிக்கும் காரணிகளாக, மரபணுக்கள் உள்ளன.
பரம்பரைக் குணாதிசயங்கள்
உடல் பண்புகள் மற்றும் உயரம் உள்ளிட்டவற்றுக்கு மட்டுமல்லாது, ஆளுமைப் பண்புகள், தனிப்பட்ட திறன்கள், சுகாதார நிலைமைகள் உள்ளிட்டவற்றுக்கான முன்கணிப்புகளையும், DNA தீர்மானிக்கிறது.சில குடும்பங்களில் தொடர்ச்சியாக இசைக்கலைஞர்களாகவும், விளையாட்டு வீரர்களாகவும் இருப்பதற்கு, DNA தான் முக்கியக் காரணமாக அமைகின்றது.
மரபணுக் குறிப்பான்கள்
DNAவில் உள்ள குறியீடுகளாக மரபணுக் குறிப்பான்கள் விளங்குகின்றன.இந்த மரபணுக் குறிப்பான்கள், நம் உடல் சார்ந்த முக்கியத் தகவல்களை, முன்னிலைப்படுத்துவதாக உள்ளன. நமக்கு எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ள உடல் ஆரோக்கியக் குறைபாட்டை, முன்னரே கண்டறிய, இந்த மரபணுக் குறிப்பான்கள் பேருதவி புரிகின்றன. DNA சோதனைகளை முன்கூட்டியே மேற்கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியம் தொடர்பான முழுமையான புரிந்துணர்வைப் பெற இயலும்.
மரபணு முன்கணிப்பு
சில தருணங்களில், சில வகை நோய்களுக்கான மரபணுக்கள் தன்னகத்தே கொண்டு இருப்பதால், புற்றுநோய், நீரிழிவுப் பாதிப்பு, இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகள், குடும்ப உறுப்பினர்களுக்குத் தொடர்ச்சியாக ஏற்படும் நிகழ்வையே, மரபணு முன்கணிப்பு என்று வரையறுக்கின்றோம்.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட நோய்க்கான மரபணுவைக் கொண்டு இருக்கும் போதும், அந்த நோயால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள் என்று உறுதியாகக் கூறிவிட இயலாது. ஏனெனில், இந்த நிகழ்வில், வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணிகளும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. ஆனால், இத்தகைய காரணிகள், நேரடியாகப் பங்குபெறுவதில்லை என்றபோதிலும், நாம் சிறந்த வகையிலான சுகாதாரத் தேர்வுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம் ஆகும்.
DNA சோதனையின் முக்கியத்துவம்
DNA சோதனைகளின் மூலம், தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவ முன்னேற்றமானது, அபரிமிதமான வளர்ச்சி கண்டு உள்ளன. உங்கள் DNA தகவல்களை மருத்துவர்கள் அறிவதன் மூலம், உங்களுக்கான சிறந்த சிகிச்சை முறைகளை வடிவமைக்க இயலும்.இதன்மூலம், மருந்துகளின் பக்கவிளைவுகள் குறைக்கப்பட்டு, அதன் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள இயலும்.
பரம்பரை நோய்கள் எனும் சவால்கள்
பரம்பரை நோய்கள் என்பது, தலைமுறை, தலைமுறையாகக் குடும்ப உறுப்பினர்களிடையே கடத்தப்படும் விரும்பத்தகாத நோய்ப்பாதிப்பு ஆகும். இந்த மருத்துவ நிலைமைகள், நமது மரபணுக்களில் குறிப்பிடப்பட்டு உள்ளன. அவற்றை நாம் புரிந்து கொள்வதின் மூலம், நாம் நம் வாழ்க்கையைத் திறம்பட வாழ்வதற்கு உதவிபுரிகிறது.
மரபணு நோய்ப்பாதிப்புகள்
நமது உடலின் DNA, அதன் இயல்பு நிலையிலிருந்து சிறிது மாறும்போது, சில வகை நோய்கள் ஏற்படுகின்றன. இவை மரபணு நோய்கள் என அழைக்கப்படுகின்றன. இவை DNA-வில் ஏற்படும் பிழைகள் போன்றவை. இவைக் கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கக்கூடும்.
மரபணுக் குறைபாடுகள்
மரபணு வடிவமைப்பில் நிகழும் எதிர்பாராத் திருப்பங்களின் விளைவாகவே, மரபணுக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவைப் பெற்றோரிடமிருந்து கடத்தப்படும் பரம்பரை மாற்றங்கள் அல்லது முதல்முறையாக நமது மரபணுவில் நிகழும் திடீர்மாற்றத்தால் ஏற்படலாம். நாம் வாழும் சுற்றுச்சூழலும் இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்தக் குறைபாடுகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு புரியாத புதிராக விளங்குகின்றன, அவற்றைப் புரிந்துகொள்ள மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும் வாசிக்க : மனநல விழிப்புணர்வு – சரியா அல்லது தவறா?
மரபணு ஆலோசனை
நீங்கள் மரபணு தொடர்பான சோதனை மேற்கொள்ளத் திட்டமிட்டு இருப்பின், மரபணு ஆலோசனை என்பது நன்கு நிபுணத்துவம் பெற்ற வழிகாட்டியை அருகில் வைத்திருப்பது போன்றது ஆகும். மரபியல் வல்லுநர்கள் அதுதொடர்பான ஆலோசனை நிகழ்வுகளில் சிறப்பு பயிற்சி பெற்ற வல்லுநர்களே, மரபியல் ஆலோசகர்களாகச் செயல்படுகின்றனர்.
மரபணு ஆபத்துகள்
குடும்ப வரலாறு மற்றும் மரபணு சோதனை முடிவுகளின் மூலம், இதனை அறிந்து கொள்ள இயலும். இதன்மூலம், சில மரபணு நிலைகள் உருவாக்கும், ஆபத்துகளைப் புரிந்து கொள்ள முடியும்.
சிக்கலான சோதனை முடிவுகள்
மரபணு சோதனை முடிவுகள் மிகவும் சிக்கலானவை ஆகும். இவை எளிதில் புரிந்துகொள்ள இயலாத வண்ணம் உள்ளதால், இதன் அர்த்தத்தை, உங்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் அதுகுறித்த விளக்கத்தை, ஆலோசகர்கள் அளிக்கும் நிலையில் உள்ளனர்.
உயிரினங்களின் வாழ்க்கைமுறையில் முக்கியப் பங்களிப்பை வழங்கும் வகையில் உள்ள டி.என்.ஏ. குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் முழுமையாக அறிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறோம்…