ஆண்களுக்கான தினசரி வைட்டமின், மினரல் தேவைகள்
இன்றைய இளம்தலைமுறையினர், உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறைக் காட்ட துவங்கி உள்ளனர். சிறந்த உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க விரும்புபவர்கள், தாங்கள் மேற்கொள்ளும் உணவுமுறையில், அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் எனப்படும் மினரல்கள் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம் ஆகும். ஆண்கள் தங்கள் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதால், உடல் ஆரோக்கியம், ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. இந்தியாவில் உள்ள ஆண்களுக்கு, அவர்கள் மேற்கொள்ளும் உணவுமுறைகளில் [...]