A senior man sitting on a bed, looking down at his hands, representing the link between sleep deprivation, cortisol, and stress.

வீக் எண்ட் லேட் ஆக எழுபவரா நீங்க – லக்கிமேன் தான்!

நீங்கள் வழக்கமான உறக்க அட்டவணையைத் தவறாமல் பின்பற்றுபவராக இருந்தாலும், சில நேரங்களில் – குறிப்பாக வார இறுதி நாட்களில் – பல்வேறு காரணங்களால் உறக்கத்தைத் தியாகம் செய்ய நேரிடலாம்.

சமீபத்திய ஆராய்ச்சிகளின்படி, வார இறுதி நாட்களில் வழக்கத்தைவிட கூடுதல் நேரம் உறங்குபவர்களுக்கு இதய நோய் உருவாகும் அபாயம் 19 சதவீதம் குறைவாக இருப்பதாக மருத்துவ ஜெர்னல் தெரிவிக்கிறது.

உறக்க நிகழ்விற்கும், இதய நலனுக்கும் இடையே உள்ள தொடர்பு

இதய ஆரோக்கியம் மட்டுமல்லாமல் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறக்கம் மிகவும் அவசியமாகும். Great Indian Sleep Scorecard அறிக்கையின்படி, இந்திய மக்கள்தொகையில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர்ச் சரியான அளவில் உறங்கவில்லை. இந்தப் போதிய அளவிலான உறக்கமின்மை நிகழ்வானது, ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு, உடல் பருமன், இதய நோய்ப்பாதிப்பு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் வருவதற்குக் காரணமாக அமைகின்றன. போதிய உறக்கம் இல்லாத நிலையில், மன அழுத்தத்தைத் தூண்டும் கார்டிசால் ஹார்மோன் அதிகளவில் சுரந்து, மன அழுத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உறக்கமின்மையால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் அழற்சி உணர்வு தூண்டப்படுகிறது. இந்த வீக்கத்திற்கு உரியநேரத்தில் சரியான சிகிச்சை வழங்கப்படாவிடின், அது மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது. உறக்கத்தில் இருக்கும்போது, மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படும்போது, அது இதயத்திற்குக் கூடுதல் அழுத்தத்தை அளிக்கின்றன. இந்த அழுத்தமானது, இதயச் செயலிழப்பு பாதிப்பு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

வார இறுதி நாட்களில் கூடுதல் உறக்கம் உதவுமா?

வார நாட்களில் 6 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவாக உறங்கியவர்கள், வார இறுதி நாட்களில் கூடுதலாக 2 மணிநேரங்கள் உறங்கினால், அவர்களின் உறக்க அட்டவணை ஈடுசெய்யப்படுகிறது. தினசரி 6 மணிநேரம் மட்டும் உறங்கியவர்கள் நிலைய ஒப்பிடும்போது, அவர்களுக்கு இதய நோய்ப்பாதிப்பு வருவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

மேலும் வாசிக்க : பெண்கள் மற்றும் இதய நோய்: அறிகுறிகளை அங்கீகரித்தல்

நாள்பட்ட நோய்ப்பாதிப்புகளுக்குக் காரணமாக அமையும் குறைந்த அளவிலான உறக்கம்

வார நாட்களில் குறைந்த நேரம் உறங்கி, அதனை ஈடுசெய்யும் விதமாக, வார இறுதி நாட்களில் கூடுதல் நேரம் உறங்குவதன் மூலம், இதய நோய்ப் பாதிப்பின் அளவைக் குறைக்கலாமே தவிர, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று அறுதியிட்டுக் கூற இயலாது.

வார நாட்களின் உறக்க அளவை, வார இறுதி நாட்களில் கூடுதல் உறக்கம் மேற்கொண்டு ஈடு செய்ய முயற்சிப்பது என்பது, நாள்பட்ட நோய்ப்பாதிப்புகளை, நாமே வலியச் சென்று வரவழைத்துக் கொள்வதற்குச் சமமாகும்.

A woman sleeping in bed with an alarm clock showing 8:00, symbolizing extra sleep on weekends.

உறக்கச் சுகாதாரம் ஏன் முக்கியமானதாக உள்ளது?

வார இறுதி நாட்களில் கூடுதல் நேரம் உறங்குவது உடல்நலனிற்கு நன்மை விளைவிக்கும் என்றபோதிலும், அது முழுமையான உறக்க நிகழ்விற்கு ஒருபோதும் ஈடாகாது.

ஆரோக்கியமான உறக்க நிகழ்வு என்பது நாம் உறங்கும் கால அளவை மட்டும் பொறுத்தது அல்ல என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அது உயர்தர, மறுசீரமைப்பு மற்றும் நிலையான உறக்க அட்டவணையை உள்ளடக்கியதாக அமைகிறது. தினசரி இரவு 7 முதல் 9 மணிநேரம் உறங்குவதை, இலக்காக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் வழக்கமான உறக்கமுறை மேற்கொள்ளப்படுவதுடன், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுத்தப்படுகிறது.

வார நாட்களில் போதிய அளவில் உறக்கம் இல்லாதது, வார இறுதி நாட்களில் கூடுதல் நேரம் உறங்குவது நாள்பட்ட நோய்ப்பாதிப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன. எப்போதும் வழக்கமான உறக்க அட்டவணைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

வார இறுதி நாட்களில் கூடுதல் நேரம் உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

வார இறுதி நாட்களில் கூடுதல் நேரம் உறங்குவதால், இதய நலன் மேம்படுவது மட்டுமல்லாது, மனநிலை மேம்படுதல், அறிவாற்றல் அதிகரித்தல், மன அழுத்தம் குறைதல் போன்ற சில நேர்மறையான விளைவுகளும் ஏற்படுகின்றன. கூடுதல் நேரம் உறங்குவதன் மூலம், மனம் மற்றும் உடல் சார்ந்த ஆரோக்கியம் மேம்படுகிறது.

உறக்கம் என்பது உடல் தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் நிகழ்விற்கான நேரம் ஆகும். போதிய அளவிலான உறக்கம் மேற்கொண்டு, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பேணிக்காத்து, ஆரோக்கியமான நல்வாழ்வு வாழ்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.