பணியிடங்களில் கீல்வாதத்தை நிர்வகிப்பதற்கான வழிகள்
கீல்வாத பாதிப்பு இருந்தால், மூட்டு வலியும் இருக்கும். கைகள், மணிக்கட்டு, தோள்கள், முழங்கால்கள் பாதிக்கப்படலாம். உடலின் மற்ற மூட்டுப்பகுதிகளிலும் கீல்வாத பாதிப்பு ஏற்படலாம். நீங்கள் வழக்கமாகச் செய்ய வேண்டிய அன்றாட நடவடிக்கைகளில் இருந்து அவை உங்களைத் திசைதிருப்புகின்றன. கீல்வாத பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு, அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் எப்போதும் இடையூறுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும். கீல்வாத பாதிப்பின் அறிகுறிகளைப் பணியிடங்களில் நிர்வகிப்பதைவிட, வீட்டில் நிர்வகிப்பது தான் எளிமையானது ஆகும். ஏனெனில், வீட்டில் தான் நீங்கள் வசதியாகவும், பழக்கமான அமைப்பிலும் இருப்பீர்கள். நீங்கள் கீல்வாத பாதிப்பிற்கு உள்ளானவர் என்றால், பணியிடத்தில் இருக்கும்போது, முடிந்தவரை வசதியாக இருக்க முயற்சி செய்யவும்.
கீல்வாத பாதிப்பிற்கு உள்ளானவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வழிகள், பணியிடங்களில் கீல்வாத பாதிப்பின் அறிகுறிகளைத் திறம்பட நிர்வகித்தல், பணியிடத்தில் மூட்டுவலிப் பாதிப்பை நிர்வகித்தல் குறித்து விரிவாக விளக்குகிறது இந்தக் கட்டுரை.
பணியிடத்தில் பணிச்சூழலியல் மதிப்பீடு செய்ய வேண்டும்
மூட்டுப்பகுதிகளில் ஏற்படும் வலிப் பாதிப்பிற்கு, உடல் அமைப்பானது முக்கிய பங்களிப்பதாக உள்ளது. நீங்கள் பணிச்சூழலியல் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். பணியிடங்களில் வசதியான வகையிலான நாற்காலியைப் பயன்படுத்துதல், கால்களைத் தரையில் தட்டையாகப் பதியச் செய்தல், இடுப்பு மற்றும் முழங்கால்களில் 90 டிகிரி கோணத்தைப் பராமரித்தல், கணினித் திரையை, கண்மட்டத்தில் நிலைநிறுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகளின் மூலம், ஆரோக்கியமான தசைக்கூட்டு அமைப்பு உருவாவது சாத்தியமாகிறது. உங்களுக்குக் கீல்வாத பாதிப்பு இருப்பின் தனிப்பயனாக்கப்பட்ட பணிச்சூழலியல் ஆலோசனையைப் பெற சுகாதார நிபுணரைக் கலந்தாலோசிப்பது நல்லது.
ஒரேமாதிரியான இயக்கங்களைத் தவிர்க்க வேண்டும்
உங்கள் பணி நடவடிக்கைகளில், ஒரேமாதிரியான இயக்கங்களைத் தொடர்ந்து செய்ய நேர்ந்தால், அது உங்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதாகவே அமையும். தட்டச்சுப் பணியில் ஈடுபட்டு உள்ளவர்கள் அல்லது டிக்டேசன் பணியில் ஈடுபட்டு உள்ளவர்கள், மணிக்கட்டு உறுதிப்படுத்தலுக்கான பிரேஸ்லெட்டுகளை அணியுங்கள். பணியின் போது மூட்டுகளுக்கு ஓய்வு தேவை. பொருட்கள் உள்ளிட்டவைகளை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்குச் செல்ல வேண்டி இருந்தால், பளுவைக் குறைக்க உதவும் சாதனங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தவும். உளைச்சல் உணர்வைக் குறைத்து மூட்டு ஆரோக்கியத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அவசரகாலப் பொருட்களை எப்போதும் அருகிலேயே வைத்திருக்க வேண்டும்
உங்கள் பணியிடத்தில் அவசரகாலப் பொருட்கள் அடங்கிய கிட்டை அருகிலேயே வைத்துக்கொள்வதன் மூலம், எதிர்பாராமல் நிகழும் கீல்வாத அறிகுறிகளைச் சிறப்பாக நிர்வகிக்க முடியும். கீல்வாத பாதிப்பிற்கு உதவும் அவசரகால பொருட்கள் அடங்கிய கிட், ஒரு குறிப்பிட்ட அளவிலான தீர்வினை மட்டுமே வழங்கும் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் விரைவான தீர்வுகளுக்கு, மருத்துவ நிபுணரை நாடுவது சாலச் சிறந்தது.
வேலை நாளில் ஒரு நீட்சிப்பயிற்சி இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள்
கீல்வாத பாதிப்பை நிர்வகிக்க உடற்பயிற்சி மிக முக்கியமானது ஆகும். வேலை நாட்களில் குறுகிய நீட்சிப்பயிற்சிக்கான இடைவெளிகளை நீட்டவும், நகர்த்தவும், லேசான பயிற்சிகளைச் செய்யவும் திட்டமிட வேண்டும் உடல்ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பது என்பது, கீல்வாத பாதிப்பை நிர்வகிப்பதற்கான சிறந்த வழிமுறைகளில் முதன்மையானது ஆகும். நம் வாழ்க்கைமுறையின் அன்றாட நடவடிக்கைகளில், இத்தகைய எளிய பயிற்சிகளை இணைப்பதன் மூலம், மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
பணி நடவடிக்கைகளில் சமூக ஆதரவையும் இணைக்கவும்
கீல்வாத பாதிப்பானது, பணியிடங்களில் உங்களைத் தனிமைப்படுத்தும் சூழலை உருவாக்கலாம். பணியிடங்களில் ஆதரவாக ஒருவர் இருப்பதன் மூலம், அவர்த் தனிமையை உணர மாட்டார். கீல்வாத நோயறிதலைச் சகப் பணியாளர்களிடமோ அல்லது உங்கள் நிறுவன முதலாளிகளுடன் தெரிவிப்பது நல்லது. சிறந்த தகவல்தொடர்பு நிகழ்வானது பணிகளில் இடையூறுகள் மற்றும் வலி உணர்வைக் குறைக்க உதவும்.
மேலும் வாசிக்க : கீல்வாத நிவாரணத்தில் புதிய சிகிச்சை முறைகளின் பங்கு
பணியின்போது, அழற்சி எதிர்ப்பு சிற்றுண்டிகளை எடுக்க மறவாதீர்கள்
அழற்சி உணர்வைக் கட்டுப்படுத்தும் வகையிலான சரியான சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், கீல்வாத பாதிப்பின் அறிகுறிகளைச் சிறந்த முறையில் நிர்வகிக்க இயலும். சிவப்பு இறைச்சிகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட அல்லது வறுத்த உணவுகள் போன்ற அழற்சி உணர்வினைத் தூண்டும் உணவுவகைகளைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது.
மேற்குறிப்பிட்ட உணவு வகைகளுக்குப் பதிலாகக் கேரட், ஆப்பிள், வேர்க்கடலை, வெண்ணெய், கொட்டை உணவுகள், குறைந்த கொழுப்பு கொண்ட தயிர், பெர்ரி, கோழி, சால்மன் மீன், காய்கறிகள் உள்ளிட்ட அழற்சியைத் தடுக்கும் வகையிலான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவப் பராமரிப்பைத் தொடரவும்
கீல்வாத பாதிப்பைச் சிறப்பாக நிர்வகிக்க, வழக்கமான மருத்துவப் பராமரிப்பை மேற்கொள்வது அவசியம் ஆகும். பாதிப்பிற்கான அறிகுறிகள் தொடர்ந்தாலோ அல்லது மோசமடைந்தாலோ, மேற்கொள்ளும் சிகிச்சைத் திட்டத்தை மறுபரிசீலனைச் செய்யச் சுகாதார வழங்குநரை அணுக வேண்டும். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளைச் சரியான நேரத்தில் மேற்கொள்வதன் மூலம், கீல்வாத பாதிப்பின் மேலாண்மை முறையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, எழும் புதிய சவால்களையும் திறம்பட எதிர்கொள்ளலாம்.
பணியிடங்களில் கீல்வாத பாதிப்பைத் திறம்பட எதிர்கொள்வது என்பது மிகவும் சவாலான பயணம் ஆகும். ஆதரவான சூழலை உருவாக்குதல், ஆரோக்கியமான வாழ்க்கைமுறைப் பழக்கங்களை மேற்கொள்ளுதல், உள்ளிட்ட நிகழ்வுகள், கீல்வாத மேலாண்மை நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்வுகளைத் திறம்பட செயலாற்றுவதன் மூலம், பணியிடங்களில் ஆறுதல் உணர்வை அதிகரித்து, உறபத்திதிறன் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்க்கையை மேம்படுத்த இயலும்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, பணியிடங்களில் கீல்வாத பாதிப்பைத் திறம்பட நிர்வகித்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…