A man's hand holding a magnifying glass focusing on a DNA strand related to genetic diseases.

மரபணுச் சோதனையின் மூலம் கண்டறியப்படும் நோய்கள்

 

மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அவர்களின் மரபணுக்கள் முக்கியமானவை. இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.மனிதர்களைப் பாதிக்கும் வகையிலான நோய்ப்பாதிப்புகளை, மரபணுச் சோதனையின் மூலம் கண்டறியலாம். அதன் நடைமுறை அம்சங்கள் குறித்து விளக்குகிறது இந்தக் கட்டுரை…

மரபணுச் சோதனை

மரபணுச் சோதனை என்பது டி.என்.ஏ. எனப்படும் மரபணுக்களை ஆராயும் சோதனையாகும். இது உங்களுக்கு ஏதாவது உடல்நலப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவுகிறது.நீங்கள் ஏதாவது நோய் அபாயத்தில் சிக்குண்டு உள்ளீர்களா, நோய்ப்பாதிப்பானது, உங்களது அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட வாய்ப்பு உள்ளதா, சில மருந்துகளுக்கு, உங்கள் உடலின் எதிர்வினை எவ்வாறு உள்ளது உள்ளிட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த மரபணுச்சோதனையானது விளங்கி வருகிறது. மரபணுக்களில் மறைக்கப்பட்ட ரகசியங்களைக் கண்டறியவும், நல்வாழ்வு தொடர்பான தகவலறிந்த முடிவுகளைத் தேர்வு செய்யவும், மரபணுச் சோதனைப் பேருதவி புரிகிறது.

மரபணுச் சோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

மாதிரிகள் சேகரிப்பு

மரபணுச் சோதனைக்காக இரத்தம், உமிழ்நீர், அல்லது சிறிய அளவிலான திசுக்கள் மாதிரியாகச் சேகரிக்கப்படுகின்றன.

டி.என்.ஏ. பிரித்தெடுப்பு

மரபணுத் தகவல்களைக் கொண்ட மாதிரியில் இருந்து டி.என்.ஏ. பிரிதெதெடுக்கப்படுகிறது.

பகுப்பாய்வுச் சோதனை

பிரித்தெடுக்கப்பட்ட டி.என்.ஏ. மூலக்கூறில் மரபணு வேறுபாடுகள் அல்லது திடீர் மாற்றங்களை அடையாளம் காணும் பொருட்டு, பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

அடையாளம் காணப்பட்ட மரபணு வேறுபாடுகள், நோய்கள் அல்லது அதன் பாதிப்பு நிலைமைகளை விளக்குகின்றன.

சோதனை முடிவுகள் தயாரிப்பு

கிடைக்கும் மதிப்புகளைக் கொண்டு, சோதனை முடிவுகள் உருவாக்கப்படுகின்றன. இது சாத்தியமான சுகாதாரப் பாதிப்புகள் தொடர்பான நுண்ணறிவுகளை வழங்குகிறது.

ஆலோசனை

சோதனை முடிவுகள் குறித்து, சுகாதார நிபுணர் உங்களுக்கு விளக்குவார். நோய்ப்பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் அல்லது வடிவமைக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்குவார்.

மரபணுச் சோதனையின் மூலம் கண்டறியப்படும் நோய்ப் பாதிப்புகள்

மரபணுச் சோதனையின் உதவியுடன், அதிகபட்சத் துல்லியத்துடன் பரம்பரை நோய்ப்பாதிப்புகள் காணப்படுகின்றன.

உடல் பருமன்

இன்றைய தலைமுறையினரை அதிகளவில் பாதிக்கும் விசயமாக, உடல் பருமன் பாதிப்பு உள்ளது. BMI மதிப்பு 30 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் இருப்பவர்கள் உடல் பருமன் கொண்டவர்களாக வரையறுக்கப்படுகின்றனர். உடல் பருமன் பாதிப்பு ஏற்படுவதற்கு, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருத்தல் முக்கிய காரணமாகக் கருதப்பட்டாலும், பரம்பரைப் பரம்பரையாக கடத்தப்படும் மரபணுக்களே, பிரதானமாக உள்ளது.

மனநிலைப் பாதிப்புகள்

பல்வேறு வகையான மனநிலை மாறுபாடுகளால் குறிக்கப்படும் பாதிப்பே, மனநிலைப் பாதிப்பாக கருதப்படுகிறது. இது பரம்பரைக் காரணிகளால் ஏற்படும் பொதுவான நோய்ப்பாதிப்புகளில் முதன்மையானதாகும்.

A gloved hand holding a test tube with blood cells floating toward it represents blood testing and screening for early detection of genetic disorders.

மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைப் புற்றுநோய்

மார்பகப் புற்றுநோய்ப் பாதிப்பானது, மார்பகப் பகுதியில் கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சியினால் ஏற்படுகிறது. இந்த நோய்ப்பாதிப்பு, பெரும்பாலும் குடும்ப வரலாறு இல்லாத நபர்களிடையே ஏற்படுகின்றன. 5 முதல் 10 சதவீதம் மட்டுமே, இது பரம்பரைக் காரணிகளால் உண்டாகின்றன. ஆனால், கருப்பைப் புற்றுநோய் பாதிப்பானது, அதற்கு நேர்எதிர் ஆகும். இந்தப் பாதிப்பானது பரம்பரைக் காரணிகளால் வருவதற்கான ஆபத்து 15 முதல் 45 சதவீதம் அதிகமாக உள்ளது.

பார்வை இழப்பு (Age-related Macular Degeneration – AMD)

AMD பாதிப்பு, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் பார்வை இழப்புடன் குறிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புள்ளவர்களின் விழித்திரை தெளிவான படங்களை மூளைக்கு அனுப்புவதை நிறுத்துகிறது. இதனால் வாசித்தல், வாகனம் ஓட்டுதல், முகங்களை அடையாளம் காணுதல் போன்ற அன்றாட செயல்களுக்கு கண்ணாடி தேவைப்படலாம்.30 சதவீத அளவிலான பார்வை இழப்புப் பாதிப்புகள், மரபணுக் காரணிகளாலும் நிகழ்கின்றன.

மேலும் வாசிக்க : வீட்டில் இருந்து வேலைபார்ப்பவர்களின் கவனத்திற்கு…

சோரியாசிஸ்

உடலில் சிவப்பு நிறத்திலான செதில் புண்கள் தோன்றி, எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் பாதிப்பே சோரியாசிஸ் ஆகும்.சோரியாசிஸ் பாதிப்பானது, மரபியல் காரணிகளாலேயே அதிகம் ஏற்படுகின்றது.

தோல் தடிப்பு அழற்சிக்குக் காரணமான மரபணுக்கள் தவிர்த்து, சோரியாசிஸ் பாதிப்பிற்கு ஏழு வகையான டி.என்.ஏ. மாறுபாடுகளும் காரணமாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

டிஸ்லெக்ஸியா

இது நரம்பியல் சம்பந்தமான பாதிப்பு ஆகும். ஒருவர் வாசிப்பதில் சிக்கலைச் சந்திக்கும்போது, இந்த பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பை, எளிதாக அடையாளம் காண இயலும். இந்தப் பாதிப்பு, குழந்தைகளிடையே பரவலாக உள்ளது.

பெற்றோரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ இப்பாதிப்பு இருந்தால், குழந்தைக்கும் வரும் வாய்ப்பு அதிகம்.

பார்கின்சன் நோய் (Parkinson’s Disease)

மூளைப்பகுதியில் டோபமைன் ஹார்மோனை உற்பத்தி செய்யும் செல்கள் குறைவதால் ஏற்படும் நரம்பு தொடர்பான பாதிப்பே, பார்கின்சன் நோய்ப்பாதிப்பு ஆகும். முகம், தாடை, கைகள், கால்களில் ஏற்படும் நடுக்கம், இந்தப் பாதிப்பின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. மெதுவான இயக்கங்கள் பலவீனமான சமநிலை உள்ளிட்டவை இதன் தீவிர அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன.

மரபணுச் சோதனையின் மூலம், இத்தகைய நோய்ப்பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கேற்ற தடுப்பு நடைமுறைகளைக் கவனமாகக் கடைப்பிடித்து, ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கை வாழ்வோமாக..

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.