Glucose levels in a blood vessel show normal, hyperglycemia, and hypoglycemia, emphasizing the importance of diabetes management.

இரத்தத்தில் சர்க்கரை அளவு – அறிந்ததும், அறியாததும்

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறித்த சார்ட், நீரிழிவு நோய்ப்பாதிப்பை நிர்வகிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்தச் சார்ட், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் காட்டுகிறது. இதன்மூலம், தனிநபர்கள் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைத் திறம்படக் கண்காணிக்க உதவுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வெவ்வேறு நேரங்களில் பதிவு செய்துகொள்வதன் மூலம், அவற்றில் நிகழும் ஏற்ற, இறக்கங்களைக் கண்டறிய முடிகிறது. இது நோய் நிர்வாகத்திற்குத் திறம்பட உதவுகிறது.

நீரிழிவு நோய் பராமரிப்பில், ஹைபோகிளைசீமியா எனப்படும் ரத்தத்தில் குறைந்த சர்க்கரை அளவு மற்றும் ஹைப்பர்கிளைசீமியா எனப்படும் ரத்தத்தில் அதிகச் சர்க்கரை அளவு என்ற பதங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறித்த சார்ட், தனிநபர்கள், இவ்விரு நிலைகளை அடையாளம் காணவும், சமநிலையைப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவுகிறது.

இரத்தத்தில் சர்க்கரை அளவுகள்

இரத்தத்தில் சர்க்கரை அளவின் கட்டுப்பாடு

இன்சுலின், குளுக்கான் உள்ளிட்ட ஹார்மோன்களைப் பயன்படுத்துவதன் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் திறம்பட நிர்வகிக்க இயலும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, அதிகப்படியான சர்க்கரை, ஆற்றல் அல்லது சேமிக்கும் பொருட்டு, செல்களில் கொண்டு செல்லப்படுகிறது.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது, அதாவது உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது, வெளியிடப்படும் குளுககான் ஹார்மோன், சர்க்கரையின் அளவைச் சீராக்க, சேமிக்கப்பட்ட சர்க்கரையை வெளியிட, கல்லீரலுக்கு உத்தரவு பிறப்பிக்கிறது.

இயல்பான அளவிலான ரத்தத்தில் சர்க்கரையின் அளவுகள்

நாம் சாப்பிடும் உணவு வகைகள், மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள், மன அழுத்தம் உள்ளிட்ட காரணிகளால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் தொடர்ந்து மாற்றங்கள் நிலவிக்கொண்டு இருக்கும். சாப்பிடுவதற்கு முன்னர், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பொதுவாக 70 முதல் 100 mg/dL என்ற அளவிலும், சாப்பிட்ட பின்னர் அது சற்று அதிகரித்த நிலையில் காணப்படும். சாப்பிட்ட 2 மணிநேரங்கள் கழித்து அது 180 mg/dL க்கும் குறைவாக இருத்தல் நல்லது.

ஹைபர்கிளைசீமியா எனப்படும் உயர் ரத்த சர்க்கரை

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துக் காணப்படும் நிலையே, ஹைபர்கிளைசீமியா அல்லது உயர் ரத்த சர்க்கரை நிலை என்று அழைக்கப்படுகிறது. சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம், இன்சுலின் உற்பத்தி குறைபாடு ஆகியவற்றால் இந்நிலை உருவாகிறது. இந்த நிலை, நீண்ட நாட்களுக்கு நீடிக்கும்பட்சத்தில் நரம்பு பாதிப்பு, சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், கண் பார்வைப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஹைபோகிளைசீமியா (இரத்தத்தில் சர்க்கரைக் குறைவு நிலை)

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இயல்பைவிடக் குறையும் நிலையில், இந்த ஹைபோகிளைசீமியா நிலை ஏற்படுகிறது. இரத்தத்தில் பொதுவான சர்க்கரையின் அளவு 70 mg/dL ஆகும். போதிய அளவு உணவை எடுத்துக்கொள்ளாத நிலை, அதிக உடல் செயல்பாடுகள், மதுப்பழக்கம், சில மருந்துகளின் விளைவுகள், நீரிழிவுப் பாதிப்பின் காரணமாக, உடலில் அதிக இன்சுலின் சுரப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்த நிலை ஏற்படலாம். அதிக வியர்வை, நடுக்கம், பலவீனம், குழப்பம் உள்ளிட்டவை, ஹைபோகிளைசீமியா பாதிப்பின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்காணித்தல் மற்றும் நிர்வகித்தல்

நீரிழிவு நோய்ப்பாதிப்பு அல்லது ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பவர்கள்,குளுகோமீட்டரைப் பயன்படுத்தி,ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். மாறுபாடுகளைக் குறித்துக்கொள்வது அவசியம் ஆகும். இதுதொடர்பாக மேற்கொள்ளப்படும் சிகிச்சைத் தகுந்த பலனளிக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படின் சில மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் அல்லது இதே போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் குளுக்கோஸ் மீட்டரைப் பயன்படுத்தி தங்கள் இரத்த சர்க்கரையை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். இது அவர்களின் நிலைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் பார்க்கவும் அவர்களின் சிகிச்சைகள் செயல்படுகிறதா என்பதைச் சரிபார்க்கவும், தேவையான மாற்றங்களைச் செய்யவும் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறித்த சார்ட் உறுதுணையாக உள்ளது.

இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த வாழ்க்கைமுறை மாற்றங்கள், மருத்துவர்ப் பரிந்துரைத்த மருந்துகள், தொடர்க் கண்காணிப்பு ஆகியவை அவசியம். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவுமுறை,எப்போதும் சுறுசுறுப்பாக இருத்தல்,ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது,மன அழுத்தத்தைச் சிறந்த முறையில் கையாள்வது உள்ளிட்ட காரணிகளின் மூலம்,ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சரியான அளவிற்குப் பேணிக்காக்க முடியும்.

மேலும் வாசிக்க : உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் வீட்டுக்குறிப்புகள்

இரத்தத்தில் சர்க்கரை அளவுக்கான சார்ட்

இரத்த சர்க்கரையின் அடிப்படைப் பதிவு

இது வெவ்வேறு நேரங்களில், எடுக்கப்பட்ட ரத்த சர்க்கரை அளவு தொடர்பான எளிய அட்டவணை ஆகும்.

நிகழ்நேரக் குளுக்கோஸ் கண்காணிப்பு

இது சிலமணி நேரங்கள் அல்லது நாள்களில் சிறப்பு சாதனங்களின் உதவியுடன் நிகழ்நேரத்தில் சேகரிக்கப்பட்ட ரத்த சர்க்கரை அளவைக் காட்டுகிறது.

உணவுமுறை ஏற்படும் தாக்கத்தை விளக்கும் சார்ட்

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்து உணவுமுறையில் மாற்றங்களை மேற்கொள்ள உதவுகிறது. இதன்மூலம், ஆரோக்கியமான உணவுமுறைச் சாத்தியமாகிறது.

இன்சுலின் நிகழ்வைச் சீராக்கும் வழிகாட்டி

இந்த வழிகாட்டியானது, உணவு உட்கொள்ளல், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், இன்சுலின் ஹார்மோன் சுரப்பு மற்றும் செயல்பாட்டைச் சீராக்குகிறது.

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறித்த பதிவுகள்

நேரம், தேதி, மருந்து, உணவு, உடற்பயிற்சிகளுக்கான இடைவெளிகளுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பதிவுசெய்தல்.

டிஜிட்டல் கண்காணிப்பு கருவிகள்

அணியக்கூடிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்காணிக்கும் வகையிலான டிஜிட்டல் கண்காணிப்பு கருவிகளின் மூலமாகவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மதிப்பிட இயலும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்வகிப்பதற்கான குறிப்புகள்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் திறம்பட நிர்வகிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, வாழ்க்கைமுறை மற்றும் பழக்கவழக்கங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொள்வது அவசியமானதாகும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும் குறிப்புகள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன.

A colorful mix of healthy foods, arranged in a circle, emphasizes the need for proper nutrition in managing diabetes.

சரிவிகித உணவுமுறை

காய்கறிகள், பழ வகைகள், முழுத் தானியங்கள், மெலிந்த புரதங்கள் கொண்ட உணவுமுறையில் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடலுக்குக் கேடு விளைவிக்கும் வகையிலான கொழுப்புகள் போன்றவற்றைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த, சிக்கலான கார்போஹைட்ரேட் உணவுகளின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி பழக்கவழக்கங்கள்

ஏரோபிக் பயிற்சிகள், வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மைப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், உடல்ரீதியாகச் சுறுசுறுப்பாக இயங்க முடியும். உடற்பயிற்சிகள், உடலில் சேகரமாகி உள்ள குளுக்கோஸைத் திறம்பட பயன்படுத்த உதவுகிறது. இன்சுலின் உணர்திறனையும் மேம்படுத்துகிறது.

மருந்து நடைமுறைகள்

மருத்துவர்ப் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் நிலையான மருந்து நடைமுறைகள் பேருதவி புரிகின்றன. மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல், சுய மருத்துவம் மேற்கொள்வதைத் தவிர்ப்பீர்.

உடலின் நீரேற்றத்தைப் பராமரிக்கவும்

உடலின் நீரேற்றத்தைப் பராமரிப்பதன் மூல,, சிறுநீரகச் செயல்பாடானது மேம்படுகிறது. தினசரி 6 முதல் 8 கிளாஸ் தண்ணீரைக் குடித்து வரவும்.

மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைச் சிறப்பாகக் கையாண்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வீராக.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.