Pet-CT என்றால் என்ன – அதன் பயன்பாடு என்ன?
மார்பகப் புற்றுநோயின் பாதிப்பை அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய மேமொகிராம் சோதனைப் பயன்பாட்டில் இருப்பது போன்று, புற்றுநோய், இதய நோய்கள் உள்ளிட்ட குறைபாடுகளைக் கண்டறிய Pet-CT ஸ்கேன் எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன் பேருதவி புரிகிறது.
புற்றுநோய் பாதிப்புகள், இதயம் மற்றும் அது சார்ந்த நோய்கள், மூளையில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை, அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய, மருத்துவ வல்லுநர்கள், Pet-CT ஸ்கேன் முறையையே அதிகம் பரிந்துரைச் செய்கின்றனர்.
பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி (PET) ஸ்கேன் என்பது, நமது உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களை ஸ்கேன் முறையில் படம் பிடிக்கும் சோதனை ஆகும். இந்தச் சோதனை மிகவும் பாதுகாப்பானது ஆகும். இந்தச் சோதனையில், ரேடியோடிரேசர் எனப்படும் கதிரியக்க வேதியியல் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் கருவிக்கு PET ஸ்கேனர் என்று பெயர்.
இந்தச் சோதனையின் போது, நமது உடலில் உள்ள இறந்த செல்கள், அதிக அளவிலான ரேடியோடிரேசர் வேதிப்பொருளை உறிஞ்சிக் கொள்கின்றன. இது நம் உடல்நிலைத் தீவிரப் பாதிப்பிற்கு உள்ளானதை எடுத்துக் காட்டும் அளவுகோலாக உள்ளது.
புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிவதற்கும் மற்றும் அது தொடர்பான சிகிச்சை முறைகளை நிர்ணயிப்பதற்கும், மருத்துவ வல்லுநர்கள், இந்த PET ஸ்கேன் முறையையே, அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதயம் மற்றும் மூளைச் சார்ந்த குறைபாடுகளுக்கும் இந்த ஸ்கேன் முறையையே அவர்கள் அதிகம் பரிந்துரைக்கின்றனர்.
மேலும் வாசிக்க : உடலின் கொழுப்பு அளவு – அறிந்ததும் அறியாததும்!
PET ஸ்கேன் எப்போது எல்லாம் தேவைப்படுகிறது?
நமது உடலில் முக்கியமான மற்றும் அன்றாட நிகழ்வுகளான இரத்த ஓட்டம், ஆக்சிஜன் பயன்பாடு, ரத்தத்தில் சர்க்கரை வளர்சிதைமாற்றம் உள்ளிட்டவைகளைக் கண்டறிய PET ஸ்கேன் முக்கிய பங்காற்றுகிறது. இந்த ஸ்கேனின் உதவியால், உடலில் சரியாக இயங்காத உறுப்புகள் மற்றும் திசுக்களை அடையாளம் காணவும் உதவுகிறது.
புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக நீங்கள் சந்தேகித்து, மருத்துவரிடம் சென்றால், அவர் உங்களை PET ஸ்கேன் எடுக்கவே பரிந்துரைச் செய்வார். இந்தச் சோதனையின் மூலம், புற்றுநோய் பாதிப்பை, நீங்கள் துவக்க நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளைப் பெற முடியும்.
உங்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டு இருப்பின்,
புற்றுநோய் பாதிப்பு உடல் முழுவதும் பரவி உள்ளதா
- சிகிச்சை முழுவதும் பலன் அளிக்கின்றதா
- சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுமா
- உள்ளிட்ட நிகழ்வுகளை அறிய PET ஸ்கேன் முறைப் பரிந்துரைக்கப்படுகிறது.
உங்களுக்கு இதய நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருந்தால்,
- மாரடைப்பின் விளைவுகளைத் தீர்மானிக்கவும்
- ஆஞ்ஜியோபிளாஸ்டி அல்லது கரோனரி தமனி பைபாஸ் சர்ஜரி உள்ளிட்ட எந்தச்
- சிகிச்சையின் மூலம் பூரண குணம் அடையலாம் என்பதைத் தெரிந்து கொள்ளவும், PET ஸ்கேன் முறை உதவுகிறது.
PET ஸ்கேனின் மகத்துவத்தை அறிந்த நீங்கள், புற்றுநோய், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வழிகாட்டியாகத் திகழுங்கள்…