Common food allergens like nuts, dairy, eggs, wheat, seafood, and citrus arranged around an 'ALLERGY' sign.

ஒவ்வாமை ரத்த பரிசோதனை என்றால் என்ன?

மனிதர்களில் ஒவ்வாமைப் பாதிப்பு மிகவும் பொதுவானதாக உள்ளது. மனித உடல் இயல்பாகவே சில பொருட்கள் மற்றும் விஷயங்களுக்கு ஒவ்வாமை உணர்வு கொண்டதாக உள்ளது. ஒரு வகையில், அவர்கள் வித்தியாசமாகத் தோன்றினாலும், எல்லோரும் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. ஒவ்வாமைப் பாதிப்புகளின் பரந்த உலகமானது, ஒரு எளிய ஒவ்வாமைச் சுயவிவரச் சோதனை அதை எவ்வாறு கண்டறிந்து தடுக்க உதவும் என்பதைப் பற்றி விளக்குகிறது. மேலும், உங்களுக்கு ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளின் அடிப்படையில் உங்கள் மருத்துவர் உங்களுக்காக, ஒவ்வாமைச் சுயவிவரச் சோதனைப் பட்டியலை மேற்கொள்வார்.

ஒவ்வாமை ரத்த பரிசோதனை என்றால் என்ன?

ஒவ்வாமை ரத்த பரிசோதனை அல்லது ஒவ்வாமைச் சுயவிவர ரத்த பரிசோதனை என்பது, வெவ்வேறு தூண்டுதல்களுக்கு அதன் பதிலைச் சரிபார்க்கும் வகையிலான ரத்த மாதிரி பரிசோதனையாக விளங்குகிறது. இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தூண்டுதல்கள் வழங்கப்பட்ட பிறகு, ரத்தத்தில் இம்யுனோகுளோபுலின்கள் அல்லது IgE இருப்பதற்கான மாதிரியை, ஒவ்வாமை ரத்த பரிசோதனைச் சரிபார்க்கிறது. எந்தவொரு தூண்டுதலுக்கும் பதிலளிக்கும் வகையில் குறிப்பிட்ட ஆன்டிபாடிகள் இருந்தால், அந்த நபருக்கு, ஒவ்வாமைப் பாதிப்பு இருப்பதைக் குறிக்கிறது. உங்களுக்கு வலிப்புப்பாதிப்பு இருப்பதாகச் சந்தேகம் இருப்பின், மேற்கொள்ள ஒவ்வாமை ரத்த பரிசோதனைக் குறித்து மருத்துவ நிபுணரை நாடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

சிலருக்குப் பல பொருட்களால் ஒவ்வாமை ஏற்படலாம். அது அவரவர்கள் மேற்கொள்ளும் விஷயத்தின் வெளிப்பாட்டைப் பொறுத்தது. பெரும்பாலான மக்களுக்கு உணவுப் பொருட்களால் சிறிய அளவில் ஒவ்வாமை ஏற்படுவது பொதுவானது. பெரும்பாலான நேரங்களில் முழுமையான ஒவ்வாமை ரத்த பரிசோதனை, தொடர்ச்சியான சில பொருட்கள் ஏற்படுத்தும் சிறிய அளவிலான ஒவ்வாமைப் பாதிப்புகளை வெளிப்படுத்துகிறது.

5 முதல் 10 சதவீத அளவிலான ஒவ்வாமைப் பாதிப்புகள், பெரிய அளவிலான ஆபத்தைத் தருவதில்லை, அதன் வீதம் அதிகரிக்கும் நிலையில், உடலில் சில அசவுகரியங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், ஒவ்வாமைப் பாதிப்பானது 50 சதவீதம் என்ற அளவை எட்டும்போது, அது சில சமயங்களில், உயிருக்கே ஆபத்தாக மாறிவிடுகிறது.

இதன்காரணமாகவே, ஆபத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய முழுமையான அல்லது விரிவான ஒவ்வாமைச் சுயவிவரப் பரிசோதனையானது பரிந்துரைக்கப்படுகிறது.

ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான காரணிகள்

  • கொட்டைகள், பால், கோதுமை, சோயா, மட்டி மீன், எள் உள்ளிட்ட உணவு வகைகள்
  • அழுக்கு மற்றும் தூசி
  • பூவின் மகரந்தத் துகள்கள்
  • சில வகை மருந்துகள்
  • பூச்சிக்கடி மற்றும் தேனீ கொட்டுதல் உள்ளிட்ட காரணிகளால், சிலருக்கு ஒவ்வாமைப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஒவ்வாமை ரத்த பரிசோதனை எதற்காக மேற்கொள்ளப்படுகிறது?

குறிப்பிட்ட நபர், ஏற்கனவே ஏதாவதொரு ஒவ்வாமைப் பாதிப்பை அனுபவித்து இருக்கும் நிலையில், அவருக்கு ஒவ்வாமைச் சுயவிவரப் பரிசோதனையை மேற்கொள்ள, மருத்துவ நிபுணர்ப் பரிந்துரைச் செய்கிறார். இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள உள்ள மருத்துவ நிபுணருக்கு, அது முதலில் என்ன வகையான ஒவ்வாமைப் பாதிப்பு என்பது தெரிந்திருக்க வேண்டும். சில நேரங்களில், ஒவ்வாமைப் பாதிப்பிற்கு உள்ளானவர்கள், தங்களுக்கு ஏற்பட்டு உள்ள ஒவ்வாமைப் பாதிப்பின் நிலையைத் தெரிந்துகொள்ள, முழுமையான ஒவ்வாமைப் பரிசோதனையை மேற்கொள்ள இயலும். இந்தப் பரிசோதனையானது, முன்னேற்ற நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. சில குறிப்பிட்ட வகை ஒவ்வாமைப் பாதிப்பிற்கு ஏற்ப, பாதிக்கப்பட்டவரின் சகிப்புத்தன்மை, காலப்போக்கில் மாற்றம் அடையக்கூடும் என்பதால், இந்தப் பரிசோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

ஒவ்வாமை ரத்த பரிசோதனை VS ஒவ்வாமைத் தோல் பரிசோதனை – வேறுபாடுகள் என்ன?

ஒவ்வாமைப் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள், ஒவ்வாமைப் பாதிப்பு நிலையை அறிய, ஒவ்வாமை ரத்த பரிசோதனை அல்லது ஒவ்வாமைச் சுயவிவரச் சோதனை, சிறந்த வழிமுறையாக உள்ளது. பாதிக்கப்பட்டவரின் உடல் நரம்பில் இருந்து, சிறிய அளவிலான ரத்த மாதிரியை எடுத்து, அதனைப் பகுப்பாய்விற்காக, ஆய்வகத்திற்கு அனுப்பி, ஒவ்வாமை ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பரிசோதனையின் அறிக்கையானது, கீழே தொகுக்கப்பட்டு உள்ள இரண்டு அளவுருக்களில், ஏதேனும் ஒன்றை வெளிப்படுத்தும்.

மொத்த இம்யூனோகுளோபுலின்கள் (IgE)

உடலில் உள்ள இம்யூனோகுளோபுலின்களின் மொத்த அளவைக் காட்டுகிறது. ஒவ்வாமைப் பாதிப்பிற்கான காரணம் அறிந்திருக்கும் நிலையில், இந்த மொத்த இம்யுனோகுளோபுலின்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது குறைவான துல்லியத்தன்மையையே கொண்டு உள்ளது என்றபோதிலும், மற்ற நடைமுறைகளுடன் ஒப்பிடும்போது, இது விலைகுறைவானது ஆகும்.

குறிப்பிட்ட இம்யூனோகுளோபுலின்கள்

குறிப்பிட்ட இம்யூனோகுளோபுலின்கள் சோதனையானது, குறிப்பிட்ட ஒவ்வாமை மற்றும் அதன் தன்மைகளுக்கான இம்யூனோகுளோபுலின்களின் அளவைக் காட்டுகிறது. இந்தச் சோதனை, மிகவும் துல்லியத்தன்மைக் கொண்டது ஆகும். ஒவ்வாமைப் பாதிப்பிற்கு உள்ளானவர்கள், முதல்முறையாக, ஒவ்வாமைச் சுயவிவரச் சோதனை மேற்கொள்ளும் போது, இந்தச் சோதனை முதலில் மேற்கொள்ளப்படுகிறது. நோயாளிகளால் பொறுத்துக் கொள்ள இயலாத அளவிலான ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தும் ஊக்கிகளை, மருத்துவ நிபுணர் அறிந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாது, அதற்கேற்ப, அதனைத் தடுக்கும் முறைகள் மற்றும் மருந்துகளைப் பரிந்துரைச் செய்ய வேண்டும்.

ஒவ்வாமைத் தோல் பரிசோதனை

முழுமையான ஒவ்வாமைப் பரிசோதனைக்கு மாற்றாக, உடலில் உள்ள தோல்ப் பகுதியின் குறிப்பிட்ட இடத்தில் குத்தி, நிகழும் எதிர்வினையைக் கண்காணிக்க, ஒவ்வாமை நிகழ்வைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சோதனையின் முடிவுகள், மிக விரைவாகக் கிடைத்து விடுவதினால், ஒவ்வாமை ரத்த பரிசோதனையை ஒப்பிடும்போது, விரைந்து மேற்கொள்வதாய் உள்ளது. இருப்பினும், இந்தத் தோல் சோதனை, பல தருணங்களில் ஒருவிதத் தோல் பாதிப்பு உள்ளவர்களுக்குச் செயல்படுவதில்லை. ஒவ்வாமைத் தோல் சோதனை, தொழில்நுட்ப வல்லுநரின் திறமையைப் பொறுத்தது. இது சில சந்தர்ப்பங்களில், சீரற்ற முடிவுகளை ஏற்படுத்த கூடும்.

முழுமையான ஒவ்வாமைச் சுயவிவர ரத்த பரிசோதனை ஏன் பரிந்துரைக்கப்படுகிறது?

மருத்துவர், பின்வரும் காரணங்களுக்காக, முழுமையான ரத்த சுயவிவரச் சோதனையைப் பரிந்துரைச் செய்கின்றனர்.

துல்லியமான முடிவுகள்

ஒவ்வொரு முறையும், துல்லியமான முடிவைப் பெற, முழுமையான ஒவ்வாமை ரத்த சோதனை, சிறந்த வழியாக உள்ளது. இந்தச் சோதனையானது, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நடத்தப்படுகிறது. மேம்பட்ட நிபுணர்களால் மேற்கொள்ளப்படுகிறது. முடிவுகள், டிஜிட்டல் அனலைசர் மூலம் சரிபார்க்கப்படுகின்றன. இது ஒவ்வொரு முறையும், 100 சதவீதத் துல்லியமான முடிவை வழங்க உதவுகிறது.

முழுமையான ஒவ்வாமை அறிக்கை

முழுமையான ஒவ்வாமைப் பரிசோதனை மருத்துவருக்குப் பேருதவி புரிகிறது. இது நோயாளியின் நிலை, ஒவ்வாமை வகைகள், மருந்துகள் மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்களைக் கண்டறிய உதவுகிறது. இது மருத்துவருக்கு முழுமையான தகவல்களை வழங்குகிறது. எனவே, நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு, சிறந்தச் சிகிச்சையை, மருத்துவர்களால் பரிந்துரைக்க உதவுகிறது.

திறமையான நோயறிதல்

முழுமையான ஒவ்வாமைச் சுயவிவரச் சோதனைத் திறமையான நோயறிதலுக்கு உதவுகிறது. நிபுணர்கள் நோயாளியின் அனைத்து ஒவ்வாமைப் பாதிப்புகளையும் கண்டறிவர். உணவுமுறை, ஆடைத் தேர்வுகள், வாழ்க்கைமுறைத் தேர்வுகள் போன்றவற்றின் அடிப்படையில் சிறந்த பரிந்துரைகளை, வழங்க உதவுகிறது. இதன்மூலம், நோயாளி, ஒவ்வாமைப் பாதிப்பில் இருந்து பூரண நலம் பெற்று, சிறந்த வாழ்க்கையை வாழ முடியும்.

Healthcare professional sterilizing a patient's arm before administering an injection for an allergy test.

ஒவ்வாமைச் சுயவிவரப் பரிசோதனையின் போது நிகழ்வது என்ன?

ஒவ்வாமை ரத்த பரிசோதனையின் செயல்முறையானது, நீங்கள் நினைக்கும் அளவுக்கு, வேதனைமிக்கது ஒன்றும் இல்லை. மருத்துவ நிபுணர், உங்கள் உடலில் இருந்து ரத்த மாதிரியை எடுக்க முயலும்போது, சிறிய வலி உணர்வை அனுபவிப்பீர்கள்.

பொதுவான ஒவ்வாமைச் சுயவிவரப் பரிசோதனையை மேற்கொள்ளப் பின்வரும் வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

  • சுகாதாரத் தொழில்நுட்ப வல்லுநர் அல்லது நிபுணர், ரத்த மாதிரியை எடுக்கப் பயன்படுத்தப்படும் பகுதியை, சிறிது ஆல்கஹால் அல்லது சானிடசரைக் கொண்டு நீக்கம் செய்வார். பெரும்பாலான நேரங்களில், இது துளையிடப்படும் கியூபிடல் நரம்பாக உள்ளது.
  • இரத்த மாதிரி எடுக்கும் பகுதியானது, முற்றிலுமாகக் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, மருத்துவ உதவியாளர் ஊசியை, குறிப்பிட்ட கியூபிடல் நரம்புப் பகுதியில் செலுத்தி, சிறிய அளவிலான ரத்தத்தை, குப்பி அல்லது குழாயில் சேகரம் செய்வார்.
  • இரத்த மாதிரி எடுக்கப்பட்ட பிறகு, அதைச் சீல் செய்து, பாதுகாப்பான முறையில் பத்திரப்படுத்தி இருப்பர்.
  • இரத்த மாதிரி எடுக்கப்பட்ட இடத்தில் பிளாஸ்டர்ப் போடப்பட்டு, அது மூடப்படும்.

மேலும் வாசிக்க : கல்லீரல் செயல்பாட்டுச் சோதனைகளை அறிவோமா?

முழுமையான ஒவ்வாமைச் சுயவிவர ரத்த பரிசோதனையின் கூறுகள்

உணவு வகைகள்

இந்த பகுதிப் பொருட்கள், நோயாளிக்கு ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான உணவு வகைகளில் உள்ள ஆன்டிபாடி புரதங்களுக்கான ரத்த மாதிரியை மதிப்பிடுகிறது.

  • முட்டைகள்
  • கோதுமை
  • நிலக்கடலை
  • முந்திரிப் பருப்பு
  • கத்திரிக்காய்
  • பால்
  • சோயா பீன்ஸ் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

துணி வகைகள்

சிலருக்கு, சில துணி வகைகளாலும், ஒவ்வாமைப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தத் துணியின் சிறு இழைகள், சுவாசப் பகுதியில் நுழையும் போது, ஒவ்வாமைப் பாதிப்பிற்கான எதிர்வினையைத் தூண்டுகின்றன.

  1. பருத்தி
  2. கம்பளம்
  3. பட்டு
  4. பாலியஸ்டர்

இவைகளைத் தவிர்த்து, வேறு சில ஒவ்வாமைப் பாதிப்புகளும் உள்ளன. மேற்குறிப்பிட்ட காரணிகள், ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்துவதில் பொதுவானவைகள் ஆகும்.

விலங்குகள்

மனிதர்களுக்கு, சில விலங்குகளின் முடி அல்லது ரோமங்களின் மூலமாகக் கூட ஒவ்வாமைப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

  • நாய்கள்
  • பூனைகள்
  • குதிரைகள்
  • செம்மறி ஆடு
  • வெள்ளாடு
  • பசு

இவைகளின் முடி மற்றும் ரோமங்களின் மூலம், மனிதர்களுக்கு, ஒவ்வாமைப் பாதிப்பானது ஏற்படுகிறது.

மலர்கள்

மனிதர்களுக்கு, சில குறிப்பிட்ட மலர்களின் வாயிலாகவும், ஒவ்வாமைப் பாதிப்பானது ஏற்படுகிறது. முழுமையான அல்லது மொத்த இம்யூனோகுளோபுலின் சோதனையானது, மலர்களின் அனைத்து மகரந்தங்களையும், ஒற்றை அலகின் கீழ்த் தொகுக்கின்றது.

சோதனையின் முடிவுகள் தெரிவிப்பது என்ன?

முழுமையான ஒவ்வாமை ரத்த பரிசோதனையின் முடிவுகள், அவர்கள் எதில் இருந்து விலகி இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் எந்த வகையான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை விளக்குகிறது.

துணி வகைகளால் ஒவ்வாமைப் பாதிப்பு ஏற்படுகிறது என்றால், குறிப்பிட்ட துணி வகைகளில் உருவாக்கப்பட்ட உடைகளைத் தவிர்க்க வேண்டும்.

விலங்குகள் மற்றும் மகரந்தம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் காரணிகளால் ஒவ்வாமைப் பாதிப்பு ஏற்படின், எல்லா நேரங்களிலும், சான்றளிக்கப்பட்ட N95 முகக்கவசத்தை அணிய மறத்தல் கூடாது.

மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்த ஒவ்வாமை எதிர்ப்பு மருந்தை, எப்போதும், கூடவே வைத்திருப்பது நல்லது. ஏனெனில், எப்போது வேண்டும் என்றாலும், ஒவ்வாமைப் பாதிப்பை நீங்கள் சந்திக்கலாம் என்பதால், எப்போதும் உடன் வைத்திருப்பது சாலச் சிறந்தது.

மேற்குறிப்பிட்ட சோதனைகளைத் தவறாமல் மேற்கொண்டு அலர்ஜி எனப்படும் ஒவ்வாமைப் பாதிப்புகளில் இருந்து முழுமையான நிவாரணம் பெற்று வளமான மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.