A woman testing blood sugar with a glucose meter, emphasizing home monitoring for diabetes.

வீட்டில் செய்யப்படும் ரத்த மாதிரி சேகரிப்பு ஏன் சிறந்தது?

மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது ரத்த பரிசோதனை மேற்கொண்டு இருப்பர். மக்களின் உடல்நலப் பாதிப்புகளைக் கண்டறிய மருத்துவ நிபுணர்கள் ரத்த பரிசோதனையைப் பரிந்துரைக்கின்றனர். நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட உடல்நலப் பாதிப்புகள் உள்ளவர்களுக்குத் தொடர்ச்சியான கண்காணிப்பு தேவை. இவர்களுக்கு ரத்த பரிசோதனைச் சிகிச்சையின் முக்கிய பகுதியாக உள்ளது.

பெரும்பாலான ரத்த பரிசோதனைகள் தொடர்பான செயல்பாடுகள், ஆய்வகத்திலோ அல்லது மருத்துவமனையில் மருத்துவரின் கண்காணிப்புடன் குறிப்பிட்ட நபரின் உடலில் உள்ள நரம்பில் ஊசியைச் செலுத்தி, ரத்தமானது சேகரிக்கப்படுகிறது. இந்தப் பாரம்பரியமான செயல்முறைக்கு, நிறைய கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்தப் பரிசோதனை மேற்கொள்ளும்போது, குறிப்பிட்ட நபருக்கு வேதனை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வீட்டிலேயே சுயமாகச் செய்யும் ரத்த பரிசோதனை மிகவும் எளிதான மற்றும் திறமையான முறையாகும். நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்காணிக்க, இந்த முறையானது பேருதவியாக உள்ளது. ஊசி குத்துவதன் மூலம், ரத்த மாதிரியைச் சேகரித்து, அதனைச் சிறிய, கையடக்கக் கருவியின் மூலம் பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது. அது ஆய்வகத்தில் மேற்கொள்வதைப் போல் துல்லியமான சோதனை முடிவுகளை வழங்குகின்றன. இந்தச் சோதனையை மேற்கொள்ள, நீங்கள் மருத்துவமனைக்கோ அல்லது பரிசோதனை ஆய்வகங்களுக்கோ நேரடியாகச் செல்லத் தேவையில்லை, அங்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதும் இல்லை.

வீட்டில் ரத்த பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

வீட்டிலேயே மிக எளிமையான முறையில் ரத்த பரிசோதனையை மேற்கொள்ள இயலும். உடலின் ரத்த நுண்குழாய்கள், ரத்த நாளங்கள், விரல் நுனிகள், குதிகால் உள்ளிட்ட பகுதிகளில் ஏதேனும் ஒன்றில், ஊசியால் குத்தி, ரத்த மாதிரியானது சேகரிக்கப்படுகிறது.

வீட்டிலேயே ரத்த பரிசோதனைக்கான செயல்முறை, பின்வரும் படிநிலைகளைக் கொண்டதாக உள்ளது.

  • இரத்த பரிசோதனை உபகரணத்தை ஆர்டர்ச் செய்து பெற்றவுடன் அதை ஆக்டிவேட் செய்யுங்கள்.
  • இரத்த பரிசோதனை உபகரணம் ஆர்டர்ச் செய்த 5 முதல் 7 நாள்களுக்குள் உங்களை வந்தடையும். உபகரணம் அடங்கிய கிட் உங்கள் கைக்குக் கிடைத்தவுடன், கணக்கை உருவாக்கி, அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
  • சோதனையின் முன்னேற்றம் மற்றும் முடிவுகளை, பயனாளர்கள், இந்தக் கணக்கின் மூலமாகவே அறிந்துகொள்ள இயலும்.

சோதனைக்குத் தயார் ஆகுங்கள்

வீடுகளில் மேற்கொள்ளப்படும் ரத்த பரிசோதனைகள் ஒவ்வொன்றும் ஒருவிதமானது ஆகும். இந்த நிகழ்வில், ரத்த மாதிரி சேகரிப்பு நடவடிக்கைகளிலும், படிநிலைகள் வேறுபடுகின்றன. நீங்கள் வீட்டிலேயே ரத்த பரிசோதனையை மேற்கொள்ளத் திட்டமிட்டு இருந்தால், அதற்கான வழிமுறைகளை அறிய வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

சில சோதனைகளுக்கு, சாப்பிடாமல் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். சிலருக்கு, காலையில் ரத்த மாதிரியை எடுக்க வேண்டும். சிலவற்றை, அதேநாளில் திருப்பி அனுப்ப வேண்டும்.

இரத்த மாதிரியைச் சேகரிக்கவும்

இரத்த மாதிரியைச் சேகரிக்க, விரல் நுனியில் சிறிய ஊசியில் குத்த வேண்டும். இது வலியற்ற நிகழ்வு ஆகும். துல்லியமான சோதனை முடிவுகளைப் பெற, சில துளிகள் அளவிலான ரத்தமே போதுமானது ஆகும்.

சிறந்த ரத்த மாதிரியைச் சேகரிப்பதற்கான குறிப்புகள்

அதிகளவு நீர் அருந்தவும்

இரத்த மாதிரியைச் சேகரிப்பதற்கு முன், உங்கள் உடலில் போதிய நீர்ச்சத்து இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். உங்கள் உடலில் போதிய நீரேற்றம் பராமரிப்பதன் மூலம், ரத்தம் மெல்லியத் தன்மைக் கொண்டதாக இருக்கும். உங்களுக்குத் தேவையான ரத்த துளிகளை, இதன்மூலம் எளிதாகப் பெற இயலும். இரத்த பரிசோதனைக்கு முந்தைய நாள், அதிகளவில் நீர் அருந்த வேண்டும். சோதனைக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு, 1 அல்லது 2 கிளாஸ் நீர் அருந்துவது நல்லது.

கைகளை உஷ்ணப்படுத்திக் கொள்ளவும்

கைகளை, வெதுவெதுப்பான நீரில் வைத்திருப்பதன் மூலம், கைவிரல்கள் உஷ்ணமாகின்றன. இந்த உஷ்ணமானது, ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.

உடலின் தீவிரமான செயல்பாடுகள்

இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, உடலைத் தீவிரமான செயல்பாடுகளுக்கு உட்படுத்த வேண்டும். நடைப்பயிற்சி செய்யுங்கள், இருக்கும் இடத்தில் இருந்தவாறே குதிக்க வேண்டும் அல்லது உங்களுக்குப் பிடித்த பாடலின் இசைக்கு ஏற்ப நடனம் ஆடுங்கள்.

A person checking glucose levels, highlighting the best finger for blood sample collection.

சரியான விரலைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் கையின் சுண்டு விரலுக்கு அடுத்து உள்ள விரல், மற்ற விரல்களைவிட கையாள்வதற்கு மிக எளிதானது ஆகும். எனவே ரத்த மாதிரியைச் சேகரிக்க, இந்த விரல் சரியான தேர்வாக உள்ளது.

இலக்கைக் குறிக்க வேண்டும்

கைவிரல் நுனியின் அருகில் குறைவான அளவிலேயே நரம்புகள் உள்ளன. எனவே, இந்தப் பகுதியில் வலி உணர்வு குறைவானதாகவே இருக்கும். விரலின் மையப்பகுதியில், அதிக ரத்தம் காணப்படும். எனவே, உங்களுக்குப் பிடித்த இடத்தைத் தேர்வு செய்து, அவ்விடத்தை ஊசியால் குத்தி, ரத்தமாதிரியைச் சேகரிக்கவும்.

மசாஜ் செய்ய வேண்டும்

ஒரு துளி ரத்தத்தைப் பெற, விரல் நுனியை அழுத்துவதைத் தவிர்க்கவும். இது ரத்த செல்களில் பாதிப்பை ஏற்படுத்தி, மாதிரியைப் பயனற்றதாக்கி விடும். போதுமான ரத்த துளிகள் கிடைக்கவில்லை எனில், முழங்கால் வரை மசாஜ் செய்ய முயற்சிக்க வேண்டும்.

இரத்த மாதிரியை, பகுப்பாய்விற்கு அனுப்பவும்

இரத்த மாதிரியை உடனடியாகச் சம்பந்தப்பட்ட ஆய்வகம் அல்லது மருத்துவமனைக்குக் கொரியரில் அனுப்பி வைக்கவும். அங்கு ரத்த மாதிரியானது பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இந்தப் பகுப்பாய்வு சோதனையின் முடிவுகள் 5 முதல் 7 நாள்களுக்குள், அதன் ஆன்லைன் போர்ட்டலில் வெளியிடப்படும்.

மேலும் வாசிக்க : நீரிழிவு பாதிப்பிற்கு மருத்துவ பரிசோதனைகள் அவசியமா?

வீட்டிலேயே ரத்த பரிசோதனை மேற்கொள்வதன் மூலம்

  • இதய ஆரோக்கியம்
  • நாளமில்லா சுரப்பிகளின் ஆரோக்கியம்
  • நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம்
  • பொது ஆரோக்கியம்

உள்ளிட்டவற்றைச் சரிபார்க்க உதவுவது மட்டுமல்லாது

  • நீரிழிவுப் பாதிப்பு மற்றும் நீரிழிவு பாதிப்பிற்கு முந்தைய நிலை
  • புராஸ்டேட் கேன்சர்
  • டெஸ்டோஸ்டிரான் அளவுகள்
  • தைராய்டு நிலைகள்
  • வைட்டமின் D அளவுகள்

உள்ளிட்டவற்றைத் திரையிட உதவுகிறது.

வீட்டிலேயே ரத்த பரிசோதனை மேற்கொள்வதன் நன்மைகள்

ஆய்வகம், மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்குப் பதிலாக, வீட்டிலேயே ரத்த பரிசோதனைகள் மேற்கொள்வதில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

மிக எளிதானது

வீட்டிலேயே மேற்கொள்ளப்படும் ரத்த பரிசோதனைக்கு, சில துளிகள் அளவிலான ரத்தமே போதுமானது ஆகும். சிறு துளிகள் அளவிற்கே, ரத்தம் எடுக்கப்படுவதினால், வலி அல்லது சிராய்ப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு ஆகும்.

மிகவும் வசதியானது

சிறந்த ஆய்வகத்தைத் தேர்வு செய்யவோ, நிபுணரின் சந்திப்பை முன்பதிவு செய்யவோ, பயணம் மேற்கொள்ளவோ, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

மிக வேகமானது

பாரம்பரிய முறையிலான ரத்த பரிசோதனையில், அதன் முடிவுகளை, மருத்துவர்ப் படித்து தெரிவிக்கும்வரை, நீங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், வீட்டிலேயே ரத்த பரிசோதனையைச் செய்யும் உபகரணத்தின் மூலம் ரத்த மாதிரியைச் சேகரித்து அதனைப் பகுப்பாய்வு செய்து, சில நாட்களிலேயே சோதனை முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

வீட்டிலேயே மேற்கொள்ளப்படும் ரத்த பரிசோதனையின் குறைபாடுகள்

  • வீட்டிலேயே மேற்கொள்ளப்படும் ரத்த பரிசோதனையானது மிகவும் வேகமானது, விலை மிகவும் குறைவானது என்றபோதிலும், அதிலும் சில குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன.
  • நீரிழிவுப் பாதிப்பிற்கு உட்பட்டவர்களுக்கு, விரல் நுனியில் குத்தி ரத்த மாதிரியைச் சேகரிப்பது என்பது மிகவும் சவாலான நிகழ்வாக உள்ளது.
  • இந்த வகைச் சோதனையில், சில துளிகள் அளவிற்கே ரத்தம் சேகரிக்கப்படுவதால், சில சோதனைகளை மட்டுமே மேற்கொள்ள முடிகிறது.
  • இந்த முறையில் மேற்கொள்ளப்படும் சில வகைச் சோதனைகள், குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டிலேயே மேற்கொள்ளப்படும் ரத்த பரிசோதனையைச் சிறந்த முறையில் மேற்கொண்டு, பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, சரியான தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து ஆரோக்கியமான மற்றும் வளமான நல்வாழ்க்கை வாழ்வோமாக..

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.