இன்சுலின் எதிர்ப்புத்தன்மைக் குறித்து அறிவோமா?
இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு கொண்டவர்களிடம் இன்சுலின் எதிர்ப்புத்தன்மைக் காணப்படுகிறது. இதனால் உடலின் செல்கள் இன்சுலினை ஏற்க மறுத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இந்த நிலை, முதல் வகை நீரிழிவுப்பாதிப்பு உடையவர்களிடம் காணப்படுவதில்லை.
இன்சுலின் எதிர்ப்பு நிலையானது, வளர்சிதை மாற்ற நோய்ப்பாதிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. உடலின் கணையம் தயாரிக்கும் இன்சுலினை, செல்கள், திசுக்கள், கல்லீரல் உள்ளிட்டவை ஏற்றுக்கொள்ளாததன் காரணத்தினால், ரத்த ஓட்டத்தில், சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
சர்க்கரை, உடலின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக விளங்குவதோடு மட்டுமல்லாது, உடலின் ஆற்றல் மூலமாகவும் விளங்குகிறது. உடல் செல்களால். சர்க்கரை முழுவதும் பயன்படுத்தப்படாவிட்டால், உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக் காரணமாக அமைகின்றன.
நீரிழிவு நோயாளிகளின் விதிவிலக்கு நிகழ்வுகளில், இன்சுலின் ஹார்மோனுக்கான அசாதாரண நிலைமைகள்
முதல் வகை நீரிழிவு நோய்ப்பாதிப்பின் காரணமாக, உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள்.
முதல் வகை நீரிழிவுப் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு, வளர்சிதை மாற்ற நிகழ்வின் போது, இன்சுலின் சென்சிட்டிவிட்டி ஏற்படுகிறது.
முதல் வகை நீரிழிவு நோய்ப்பாதிப்பு கொண்ட கர்ப்பிணிகளுக்கு, இன்சுலின் எதிர்ப்பு நிலை ஏற்படும் ஆபத்து உள்ளது.
தொற்று நோய்ப்பாதிப்பிற்கு உள்ளானவர்கள், இன்சுலின் எதிர்ப்பு நிலையைப் பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
உடல்ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்
சர்க்கரைக் குறைவாகக் கொண்ட உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்
செல்கள் மற்றும் கல்லீரலில் அதிக இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்க, உடலின் போதிய அளவிலான நீரேற்றம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இன்சுலின் எதிர்ப்பின் நிலைகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு, இன்சுலின் எதிர்ப்பு நிலை உருவாகும்பட்சத்தில், அது அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன.
உடலின் இன்சுலினின் அளவு சீராக இருக்கும்பட்சத்தில், இன்சுலின் சென்சிட்டிவிட்டியும் வழக்கமான அளவிலேயே இருக்கும். முதல் நிலையில், கணையத்தில் உள்ள பீட்டா செல்கள், ரத்த சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்திற்காக, இன்சுலினைச் சுரக்கத் தூண்டும். இந்த இன்சுலின், செல்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சர்க்கரையை, ஆற்றலாக மாற்றுகிறது.
இரண்டாம் நிலையில், ரத்தத்தில் சர்க்கரை அளவின் அதிகரிப்பிற்கு ஏற்ப, அதிகப்படியான இன்சுலின் சுரப்பு நிகழ்கிறது.
மூன்றாம் நிலையில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டை மீறி அதிகரிக்கும்போது, அதனை நிர்வகிக்கத் தேவையான இன்சுலின் இல்லாத நிலை நிலவுகிறது. இதன்காரணமாக, குளுக்கோஸ் சகிப்பின்மை நிலை ஏற்படுவதுடன், இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பை நோக்கி நகர்கிறது.
இன்சுலின் எதிர்ப்புத்தன்மை நிகழ்வானது, ரத்த சர்க்கரை வளர்சிதை மாற்றத்தை வெகுவாகப் பாதிக்கிறது. இதன்மூலம், ரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகரித்து, ஹைபர்கிளைசீமியா நிலை ஏற்படுகிறது. நான்காம் நிலையில், அதிகரித்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த போதிய அளவிலான இன்சுலினை, கணையம் உற்பத்தி செய்கிறது. சிலநேரங்களில், இந்த நிகழ்வானது தவிர்க்கப்படுகிறது.
ஐந்தாம் நிலையில், அவருக்கு இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், அதிகரித்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் அளவிலான இன்சுலினை, கணையத்தால் உற்பத்தி செய்ய இயலாத நிலை நிலவுகிறது.
இன்சுலின் சென்சிட்டிவிட்டி குறைவது, திடீர்மாற்றத்திற்கு உள்ளான வளர்சிதை மாற்ற நிகழ்வினால் உண்டாகிறது. அடிவயிற்றுப் பகுதியில் நச்சுக் கொழுப்பு உருவாக்கம், உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு உள்ளிட்ட காரணிகளாலும், இன்சுலின் செயல்பாடு தடைபடுகிறது. இதன்விளைவாக, உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த வளர்சிதை மாற்ற நோய்ப்பாதிப்பானது, ஆறாம் நிலையை ஒத்து உள்ளது.
இன்சுலின் எதிர்ப்பு நிலையின் விளைவுகள்
இன்சுலின் எதிர்ப்பு நிலையின் உண்மையான காரணம், நடைமுறை மருத்துவ அறிவியலில் இன்னமும் விளக்கப்படாமலேயே உள்ளது. மரபியலில் அசாதாரண சூழல், வாழ்க்கைமுறையில் சீரற்ற நிலைகள் அல்லது பாதகமான சுற்றுச்சூழல் விளைவுகள் உள்ளிட்டவைகளும் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன.
மரபணுக் குறைபாடு (Genetic Disorder)
இன்சுலின் எதிர்ப்பு நிலைப் பாதிப்புகள், பெரும்பாலும் அவற்றின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தே பெறப்படுகின்றன. நோயாளியின் குடும்ப உறுப்பினர்களுக்கு, இன்சுலினுக்கு எதிர்வினையாற்றும் வகையிலான செல்கள் பலவீனமாகவோ தோன்றுகின்றன.
அதிக உடல் எடை நிலை
ஒரே நேரத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பது, சம்பந்தப்பட்ட நபரை, உடல் பருமன் கொண்டதாக மாற்றும். வளர்சிதை மாற்ற நடவடிக்கைகள், அவர்களை அசாதாரண உடல்வாகு கொண்டதாக மாற்றும். உட்கார்ந்த வாழ்க்கைமுறைக் காரணமாக, உணவு செரிமான மண்டலமானது பாதிக்கப்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரிக்க, உங்களைச் சுறுசுறுப்பாக வைத்து இருப்பது அவசியம் ஆகும்.
மோசமான உணவுமுறைகள்
தெருவோரக் கடைகளில் வைக்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சுவை மிகுந்தவை மற்றும் பசியைப் போக்குபவை. ஆனால் இவை நமது ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இத்தகைய உணவு வகைகள், உடலில் நச்சுக் கொழுப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாது, கல்லீரல் பாதிப்பு அல்லது நீரிழிவு நோய்ப்பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடுகின்றன.
அலோபதி மருந்துகளின் பயன்பாடு
இரத்த அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு வழங்கப்படும் அலோபதி மருந்துகள், வாய்வழியாக உட்கொள்ளப்பட்டபிறகு, சிலருக்கு இன்சுலின் சென்சிட்டிவிட்டி தொடர்பான நிகழ்வுகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுற்றுச்சூழலில் வேதிப்பொருட்களின் வெளிப்பாடு
சுற்றுச்சூழல் மாசுபாடுகள் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவைத் தோல் மற்றும் முடிக்கு நேரடி சேதம் விளைவிப்பதோடு,ரத்தத்தில் கொழுப்பின் அளவையும் மாற்றுகின்றன. இதன்காரணமாக, ரத்த நாளங்கள் பாதிப்பிற்கு உள்ளாவதால், உடலில் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கிறது.
அறிகுறிகள்
இன்சுலின் எதிர்ப்பு நிலைத் தொடர்பான அறிகுறிகள், சிகிச்சை மற்றும் மருந்துகளைப் பரிந்துரைக்க, மருத்துவருக்குப் பேருதவி புரிகின்றன. இந்த அறிகுறிகள் அனைத்தும் கிட்டத்தட்ட நீரிழிவுப் பாதிப்பிற்கு ஒத்தவையாக உள்ளன.
அதிகத் தாக உணர்வு
அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்
அதீதப் பசி உணர்வு
பார்வை மங்குதல்
காயம் குணமாவதில் தாமதம்
தோல் மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளில் நோய்த்தொற்றுகள் ஏற்படுதல்
கடுமையான தலைவலி உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும்
சிகிச்சை முறைகள்
ஆரோக்கியமான உணவுமுறை
சரியான அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளை உள்ளடக்கியதே ஆரோக்கியமான உணவுமுறை ஆகும். உணவுவகைகளில், மசாலாக்கள் அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பருப்பு வகைகள், ஓட்ஸ், முழுத் தானியங்கள், கொழுப்பு குறைந்த இறைச்சிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆல்கஹால் உள்ளிட்ட எந்தவொரு போதைப்பழக்கத்திற்கும் அடிமையாகாமல் இருக்க வேண்டும். சிவப்பு இறைச்சியைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது. பழுப்பு அரிசி, முழுத்தானியம் மற்றும் பாஸ்மதி அரிசி ஆகியவைக் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸைக் கொண்டுள்ளன. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பொருத்தமானவை. உணவில் இருந்து உருளைக்கிழங்கைத் தவிர்ப்பதன் மூலம், இன்சுலின் எதிர்ப்பு நிலையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.
மேலும் வாசிக்க : நீரிழிவுப்பாதிப்பு உள்ளவர்களின் இரத்த சர்க்கரை அளவு
உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை நிர்வகித்தல்
உடலின் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்க, உடற்பயிற்சி சிறந்த மற்றும் எளிய பயிற்சிமுறையாக விளங்குகிறது. வாரத்திற்கு 6 நாள்கள் வீதம் 30 முதல் 40 நிமிடங்கள் கால அளவிற்கு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். உடற்பயிற்சி பழக்கவழக்கங்கள், நீரிழிவு நோய்ப்பாதிப்புடன் தொடர்புடைய இதய நோய் அபாயத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாது, உடல் எடையை ஆரோக்கியமான முறையில் நிர்வகிப்பதற்கும் உதவுகிறது. பயிற்சியாளரின் மேற்பார்வையில் யோகா அல்லது உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், உடல்வாகுவை நல்ல வடிவத்திற்குக் கொண்டுவர முடியும்.
போதிய அளவிலான நீர் அருந்துதல்
இன்சுலின் எதிர்ப்புத் தன்மைக் கொண்டவர்கள், தினமும் 10 முதல் 12 கிளாஸ் நீர் அருந்துவதன் மூலம், ரத்த ஓட்டத்தில் உள்ள சர்க்கரையை நீர்த்துப்போகச் செய்கிறது. இதன்காரணமாக, இன்சுலின் செயல்திறன் மேம்படுகிறது.
போதிய ஓய்வு மற்றும் உறக்கம்
உயர் ரத்த சர்க்கரை மற்றும் பலவீனமான இன்சுலின் சென்சிட்டிவிட்டி பாதிப்புகளுக்கு, கார்டிசோல் சுரப்பின் அதிகரிப்பே காரணம் ஆகும். தினசரி இரவு 7 முதல் 8 மணிநேரம் ஆழ்ந்த உறக்கம் மேற்கொள்வதின் மூலம், மன அழுத்தம் கட்டுப்படுத்தப்படுவதோடு, மூளை நரம்புகள் தூண்டப்படுவதோடு, ரத்த ஓட்டம் சீராகிறது.
மேற்கண்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரித்து, இன்சுலின் எதிர்ப்பு நிலையைத் தவிர்த்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…