woman holding two burgers amid fast food, symbolizing polyphagia, or extreme hunger.

நீரிழிவு பாதிப்பிற்கு மருத்துவ பரிசோதனைகள் அவசியமா?

நீரிழிவு நோய்ப்பாதிப்பு என்பது உயர் இரத்த சர்க்கரையால் வகைப்படுத்தப்படும் மருத்துவ நிலை ஆகும். உடலின் இன்சுலின் ஹார்மோன் போதிய அளவில் உற்பத்தி ஆகாதநிலை அல்லது செல்கள் இன்சுலினுக்குச் சரியாகப் பதிலளிக்காததே, நீரிழிவு நோய்ப்பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் ஆகும்.

இரத்தத்தில் அதிகச் சர்க்கரைக் கொண்டவர்கள் பாலியூரியா (அடிக்கடி சிறுநீர்க் கழித்தல், பாலிடிப்சியா (அதிகத் தாகம்) மற்றும் பாலிஃபேஜியா எனப்படும் அதீதப் பசி உள்ளிட்ட நிலைகளை அனுபவிக்கின்றனர்.

நீரிழிவு நோய்ப்பாதிப்பு என்பது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கவல்ல, நாள்பட்ட பாதிப்பு ஆகும். சர்வதேச அளவில 382 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள், நீரிழிவு நோய்ப்பாதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நீரிழிவுப் பாதிப்பின் வகைகள்

நீரிழிவு நோய்ப்பாதிப்பானது முதல் மற்றும் இரண்டாம் வகைப் பாதிப்பு என்ற இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.

முதலாம் வகை நீரிழிவுப் பாதிப்பு (Type 1 Diabetes)

இந்த வகைப் பாதிப்பானது, தன்னுடல் தாக்க நோய்ப்பாதிப்பு என்று வரையறுக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புக்கு உள்ளானவரின் நோய் எதிர்ப்பு அமைப்பு, கணையத்தில் உள்ள செல்களைத் தாக்கி, இன்சுலின் ஹார்மோனின் உற்பத்தியைத் தடுக்கிறது. இவ்வகைப் பாதிப்பை, குணப்படுத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு (Type 2 Diabetes)

இந்த வகைப் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் உடலில் இன்சுலின் ஹார்மோனின் உற்பத்தி சீரான நிலையிலேயே இருக்கும், ஆனால், அதனை உடலில் உள்ள செல்களால் பயன்படுத்த இயலாது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுமுறையின் மூலம், இவ்வகைப் பாதிப்பைக் குணப்படுத்தவோ அல்லது தாமதப்படுத்தவோ முடியும்.

நீங்கள் நீரிழிவு நோய்ப்பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருப்பின்

  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, நிர்ணயித்த அளவிற்குள் வருகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.
  • நீரிழிவு நோய்ப்பாதிப்பின் சிக்கல்களைத் தவிர்க்க, அவ்வப்போது, ஸ்கிரீனிங் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவப் பரிசோதனைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

நீரிழிவு நோய்ப்பாதிப்பால் ஏற்படும் சிக்கல்கள்

நீரிழிவு நோய்ப்பாதிப்பால் ஏற்படும் சிக்கல்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டு உள்ளன.

கார்டியோவாஸ்குலார் (இதய) நோய்ப்பாதிப்பு

உங்களுக்கு, நீரிழிவு நோய்ப்பாதிப்பு இருப்பின், இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த நோய்ப்பாதிப்பானது, இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த குழாய்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இதன்மூலம், இதயத்துடிப்பு நிகழ்விலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதன்காரணமாக, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட இதயப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நரம்புகள் சேதம்

நீரிழிவு நோயாளிகள் பலருக்குக் கால்களில் உணர்வின்மை நிலையை உணர்கின்றனர். இதன்காரணமாக, அவர்களின் கால்களில் புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீரிழிவு நோய்ப்பாதிப்பினால் ரத்த குழாய்களில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக, நரம்புகளுக்குச் செல்லும் ரத்தம் தடைபடுவதனால், இந்த நிலை உருவாகிறது.

சிறுநீரகப் பிரச்சினைகள்

உடலின் ரத்தத்தை வடிகட்டும் சீரியப் பணியினை மேற்கொண்டு வரும் சிறுநீரகங்களைப் பாதிக்கும் கடுமையான உடல்நலப் பாதிப்பாக, நீரிழிவு நோய்ப்பாதிப்பானது விளங்குகிறது.

கண்பார்வைக் குறைபாடு

நீரிழிவு நோய்ப்பாதிப்பானது, கண்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் தடைச் செய்கிறது. இதன்காரணமாக, கண்பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

A doctor examining a patient, highlighting the need for check-ups every three months to monitor blood sugar levels.

மருத்துவப் பரிசோதனைகளின் முக்கியத்துவம்

நீங்கள் நீரிழிவு நோய்ப்பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால், மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், பாதிப்பு நிலையைத் திறம்பட நிர்வகிக்க இயலும்.

மருத்துவரின் ஆலோசனை

உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் பெரியளவிலான மாறுபாடு இல்லை எனும்பட்சத்தில், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, நீங்கள் மருத்துவரைச் சந்தித்தால் போதுமானது ஆகும். அதுவே, ரத்தத்தில் சர்க்கரை அளவு, எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி உயர்ந்து காணப்படின், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை நீங்கள் மருத்துவரைச் சந்தித்து, அவர்ப் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

உடலின் ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்ட அளவீடுகள் சீராக உள்ளனவா என்பதைக் கண்டறிய, மருத்துவர் இரண்டு வகையான பரிசோதனைகளைப் பரிந்துரைச் செய்வார்.

A1C சோதனை

நீரிழிவு பாதிப்பு நோயாளிகள், பாதிப்பின் தீவிரம் அதிகரித்துக் காணப்படும்பட்சத்தில், ஒருநாளைக்கு ஒருமுறை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்காணித்து வர வேண்டும். இதன்மூலம், மருத்துவ நிபுணர், ரத்த சர்க்கரைக் குறித்த முழுமையான பரிசோதனையை மேற்கொள்ள இயலும். A1C சோதனையானது, இரண்டு மாதங்கள் கால அளவிலான, ரத்த சர்க்கரை அளவின் சராசரியை உங்களுக்கு அளிக்கிறது. நீரிழிவுப் பாதிப்பு மேலாண்மைக்கு, இது சிறந்த வகையில் உறுதுணைப் புரிகிறது.

மேலும் வாசிக்க : நாள்பட்ட நோய்ப்பாதிப்புகளைச் சோதனைகளின் மூலம் நிர்வகித்தல்

ACR சோதனை

இந்தச் சோதனையானது, ஆல்புமின் – கிரியேட்டினின் விகிதத்தை அளவிட உதவுகிறது. இதன்மூலம், சிறுநீரகங்களின் செயல்பாட்டை நாம் மதிப்பிட இயலும்.

மருத்துவ நிபுணர், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கணக்கிடுவது மட்டுமல்லாது, ரத்த அழுத்தம், உடல் எடை உள்ளிட்ட காரணிகளையும் மதிப்பிடுகின்றனர். உங்கள் உடல்நல ஆரோக்கியம் சார்ந்த அனைத்துச் சந்தேகங்களுக்கும், மருத்துவர்த் தீர்வுகாண உதவுவதால், கேட்க வேண்டியனவற்றை, மருத்துவரின் சந்திப்பிற்கு முன்னதாக, குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுதல் நலம்.

கண் பார்வைத் தொடர்பான பரிசோதனைகள்

நீங்கள் நீரிழிவு நோய்ப்பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தால், வழக்கமான சோதனைகள் தவிர்த்து, மருத்துவர் ஆண்டுதோறும் உங்களைக் கண் பார்வைத் தொடர்பான பரிசோதனைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்துவார்.

கண்பார்வையில் ஏற்படும் பாதிப்புகளை, கண் பார்வை மங்கும்வரை, அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை. இந்தக் கண் பார்வைப் பாதிப்பானது எதனால் ஏற்படுகிறது என்பதைப் பெரும்பாலானோர் அறிந்திருப்பதும் இல்லை. யாராக இருப்பினும், ஆண்டுக்கு ஒருமுறை, கண் பரிசோதனைச் செய்து கொள்வது சாலச் சிறந்தது.

பற்கள் சார்ந்த பரிசோதனைகள்

நீரிழிவு நோய்ப்பாதிப்பானது, பற்கள் மற்றும் வாய் ஆரோக்கியத்தையும் பாதிப்பதாய் உள்ளன. இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும்பட்சத்தில், உங்கள் உமிழ்நீரில் சர்க்கரை அதிகம் இருக்கும்.

நீரிழிவு நோய்ப் பாதிப்பு கொண்ட நோயாளிகளிடம், இனிப்புச் சுவைக் கொண்ட உணவு வகைகளைத் தவிர்க்குமாறும் பல் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மனிதர்களின் வாய்ப்பகுதியானது, பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நுண்ணுயிரிகளால் நிரம்பி உள்ளது. நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சர்க்கரையே, அவைகளின் ஆற்றல் மூலமாக உள்ளன. உமிழ்நீரில் அதிகச் சர்க்கரை இருக்கும்பட்சத்தில், அது பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் பல்கிப்பெருகுவதற்கு வழிவகுக்கிறது. இதன்காரணமாக, பற்களில் சிதைவு, ஈறுப்பிரச்சினைகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பின் கண் பார்வை மற்றும் பற்கள் சார்ந்த பிரச்சினைகளை மேலும் தீவிரமாக்குகின்றன. இரத்தத்தில் அதிகச் சர்க்கரை இருக்கும் நிகழ்வானது, உடல் தொற்றுநோய்ப் பாதிப்பை எதிர்த்துப் போராடுவதை, கடினமாக்குகின்றன. உங்கள் உடல் தொற்றுநோய்ப் பாதிப்பை, எதிர்த்துப் போராடவில்லை எனில், இதயம், ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுகின்றன. இதன்காரணமாக, தொற்றுநோய்களின் சிக்கல் ஆபத்து அதிகரிக்கிறது. பல் மருத்துவரை, சீரிய இடைவெளிகளில் சந்தித்து உரிய ஆலோசனைகளைப் பெற்று நடப்பதன் மூலம், பற்கள் தொடர்பான பாதிப்புகளைக் கூடுமானவரைத் தடுக்க இயலும்.

வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் ஆரோக்கியத்தை நிர்வகித்தல்

நீரிழிவு நோய்ப்பாதிப்பானது, நாள்பட்ட மற்றும் மிகவும் சிக்கலான குறைபாடு ஆகும். இந்த நோய்ப்பாதிப்பை, உரிய சிகிச்சைமுறைகளை, தக்கநேரத்தில் மேற்கொண்டால், அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இயலும். கார்பாஹைட்ரேட் குறைவாக உள்ள உணவு வகைகளைச் சாப்பிடுகிறீர்கள், தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறீர்கள், நீரிழிவு நோயின் பாதிப்பைக் கட்டுப்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவைத்தொடர்ந்து கண்காணித்து வருகிறீர்கள். இத்தனை அம்சங்களுடன், சீரிய கால இடைவெளிகளில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொள்ளும் பட்சத்தில், உடல் ஆரோக்கியத்தைச் சிறந்த முறையில் மேம்படுத்தலாம் என்பது திண்ணம்.

நீரிழிவு நோய்ப்பாதிப்புக்கு உள்ளானவர்கள், சீரிய இடைவெளிகளில், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து வளமான மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.