Wooden blocks forming

உடல் எடையைக் குறைப்பது இவ்வளவு எளிமையானதா?

நீங்கள் ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களா?, ஜிம்மிலோ அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சிகளைச் செய்வார்கள்.உங்கள் உடலமைப்பு எந்த வகையினதானது என்பதை நீங்கள் எப்போதாவது பார்த்து இருக்கிறீர்களா? உங்கள் உடல் இந்த வடிவில் தான் இருக்க வேண்டும் என்பதை நீங்களாகவே தீர்மானிக்க இயலாது. ஏனெனில், நீங்கள் பிறப்பு நிகழ்வின்போதே, உங்கள் உடலமைப்பை, மரபணுக்களால் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.

உங்கள் உயரம் மற்றும் எலும்பு அமைப்பை மாற்ற இயலாது.ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சரியான உடற்பயிற்சி பழக்கவழக்கத்தின் மூலம், நீங்கள் உங்கள் உடலின் அமைப்பை மாற்றி அமைக்க இயலும். உங்கள் உடலமைப்புக்கு ஏற்ற வகையிலான உடற்பயிற்சிகளைச் சரியாகத் தேர்வுசெய்து, அதனை மேற்கொள்வதன் மூலம், நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெற இயலும்.

உடற்செயலியல் வல்லுநர்கள், மனிதர்களின் உடல் அமைப்பை எக்டோமார்ஃப், மீசோமார்ஃப், மற்றும் எண்டோமார்ஃப் என்ற மூன்று வகைகளாகப் பிரித்து உள்ளனர்.

எக்டோமார்ஃப் வகையினர் உயரமாகவும், மெல்லிய தேகம் கொண்டவர்களாக இருப்பர்.அவர்கள் விரும்பியதை, விரும்பிய நேரத்தில் சாப்பிட்டு மகிழலாம்.

மீசோமார்ஃப் வகையினர், தங்கள் உடல் தசைகளில் குறைந்த அளவிலான கொழுப்பைக் கொண்டிருப்பர்.

எண்டோமார்ஃப் வகையினர், வட்ட வடிவிலான உடல் அமைப்பைக் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள், உடல் எடை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க இயலாத கையறுநிலையில் இருப்பர். இந்த உடல் வகைகள், மரபணுக்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. இந்த மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றில்தான், நாம் அனைவரும் இருப்போம்.

எக்டோமார்ஃப் உடலமைப்பு

இந்த உடல் அமைப்பு கொண்டவர்கள், விரைவான வளர்சிதை மாற்றத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். இவர்கள் தங்கள் உடலில் குறைந்த அளவிலேயே தசைகளைப் பெற்றிருப்பதால், உடலில் கொழுப்பு சேகரமாவதை மிக எளிதாகத் தடுக்க இயலும். இவர்கள் மெல்லிய எலும்பு கொண்டவர்களாக இருப்பதால், இவர்கள் உடல் குண்டாவது மிகவும் கடினம் ஆகும்.

இந்த உடல்வாகு கொண்ட மக்கள், அதிகக் கலோரிகள் கொண்ட உணவு வகைகளை எடுத்துக் கொள்வதன் மூலமும், நடைப்பயிற்சி, ஸ்குவாட்கள் போன்ற கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம், விரும்பிய உடலமைப்பைப் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள் எடைப் பயிற்சியையும், இரண்டு நாள்கள் நடைப்பயிற்சியை மேற்கொண்டு, இதய நலனைப் பராமரிக்க இயலும்.

இவர்கள் எப்போதும் உடல் தோரணையை எப்போதும் பேணிக்காப்பது நல்லது. வேகமாக மேற்கொள்ளும் வகையிலான யோகாப் பயிற்சிகளை, இவர்கள் தவிர்ப்பது நல்லது.

A woman sprinting on a track, emphasizing its benefits for muscle growth and the Mesomorph physique.

மீசோமார்ஃப் உடலமைப்பு

இந்த வகையினர், ஜிம்மிற்குச் செல்லாமல் இருந்தால்கூட, நன்கு கட்டமைக்கப்பட்ட உடலமைப்பும், தசைகளையும் பெற்றிருப்பர். இவர்களால், உடலில் அதிகக் கொழுப்பு சேகரம் ஆகாமல், புதிய தசைகளை உருவாக்கிட இயலும்.

இவர்கள், இயற்கையிலேயே வலுவானவர்களாக இருப்பர். இவர்களின் உடல் தசைகள் அடர்த்தியாகவும், தடிமனாகவும் உள்ளன. மிதமான முதல் கனமான எடைகளைத் தூக்குவதன் மூலம், தசை வளர்ச்சியானது மேம்படுகிறது.

இது தடகள திறன்களை வளர்க்க உதவுவது மட்டுமல்லாமல், தசை நிறையையும் அதிகரிக்க உதவுகிறது. ஸ்குவாட்கள், ஸ்பிரிண்ட்ஸ் ஆகிய பிளைமெட்ரிக் உடற்பயிற்சிகள், மிகவும் பயனுள்ள உடற்பயிற்சிகளாக அமைகின்றன.

இந்த உடலமைப்பு கொண்டவர்கள், வளர்சிதைமாற்ற வீதத்தை அதிகரிக்க, மெதுவாக மேற்கொள்ளக்கூடிய யோகாப் பயிற்சிகளைச் செய்வதன் மூலம், உடலின் நெகிழ்வுத்தன்மையையும், வலிமையையும் அதிகரிக்கச் செய்யலாம்.

ஒவ்வொருவருக்கும் அவர்களின் உடல்வாகு மற்றும் அமைப்பினைப் பொறுத்து உடற்பயிற்சிகள் வேறுபடும் என்பதால், அவர்கள் தகுந்த உணவியல் மற்றும் ஊட்டச்சத்து, உடற்பயிற்சி நிபுணர்களைக் கலந்தாலோசித்து, அவர்கள் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகளைத் தேர்வு செய்வது உத்தமம்.

மேலும் வாசிக்க : உடல் ஆரோக்கியத்திற்கு வளர்சிதை மாற்ற வயது தேவையா?

எண்டோமார்ஃப் உடலமைப்பு

உடலில் சேமிக்கப்படும் அதிக அளவிலான உடல் கொழுப்பால், இந்த வகை உடலமைப்பு ஏற்படுகிறது. இந்த உடலமைப்பு கொண்டவர்களின் உடலில், வளர்சிதைமாற்ற நிகழ்வானது மெதுவாக நடைபெறும். இவர்களின் உடலில் உள்ள எலும்பு அமைப்பானது, மற்ற வகையினரை ஒப்பிடும்போது, அதிக அகலம் கொண்டதாக இருக்கும். இவர்கள், சிறந்த உடல்வாகு அல்லது உடல் தோரணைக் கொண்டவர்களாக இருப்பர்.

இந்த வகை உடலமைப்பைக் கொண்டவர்கள், நடைப்பயிற்சி, மெதுவாக ஓடுதல் எனப்படும் ஜாக்கிங் பயிற்சி, நீச்சல் உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய நிலையான உடல் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சிகள், இதய நலனை மேம்படுத்துகிறது. உடலின் தசைகளுக்குத் தேவையான பிராண வாயுவைப் பெற உதவுகிறது. இதயத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்த ஏரோபிக் உடற்பயிற்சிகள் பேருதவி புரிகின்றன.

போதிய இடைவெளியிலான பயிற்சிகள், உடலின் கலோரி எரிப்பை மேம்படுத்துவதோடு, இதயத்துடிப்பின் வீதத்தையும் சீராக்குகின்றது. இது நீங்கள் மேற்கொள்ளும் மெதுவான மற்றும் நிலையான உடற்பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது, 24 மணிநேரத்தில், மிக அதிக அளவிலான கலோரிகளை எரிக்கிறது.

தசைகளில் உள்ள கலோரிகள் அதிகம் எரிக்கப்படுவதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்படுவதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். பிராணாயாமம் மேற்கொள்வதன் மூலம், மந்தநிலையானது நீங்குவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உடல் எடையைக் குறைக்கத் திட்டமிட்டு உள்ளவர்கள், தங்களின் உடலமைப்பு குறித்த முறையான தகவல்களை முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ற வகையிலான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, இலக்கை எட்டிப்பிடித்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வீர்களாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.