முக்கிய நரம்பியல் குறைபாடுகள்.

நரம்பியல் கோளாறுகள் அல்லது மூளை, முதுகெலும்பு மற்றும் அவற்றை இணைக்கும் நரம்புகளில் ஏற்படும் நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கின்றன. மேலும் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், தங்களுக்கு நரம்பியல் கோளாறு இருப்பதாக பலருக்குத் தெரியவே இல்லை.

நரம்பியல் கோளாறுகளின் அறிகுறிகளைப் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் இது உங்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவ உதவிகளைப் பெற வழிவகுக்கும். இது சரியான நோயறிதல் மற்றும் பயனுள்ள சிகிச்சையை ஏற்படுத்தும். நாம் காணும் பொதுவான நரம்பியல் கோளாறுகள் மற்றும் ஒவ்வொன்றையும் அடையாளம் காண்பதற்கான முக்கிய வழிகள் பற்றி இங்கே விவாதிப்போம்.

1.தலைவலி:

தலைவலி மிகவும் பொதுவான நரம்பியல் கோளாறுகளில் ஒன்றாகும். மேலும் ஒற்றைத் தலைவலி, கொத்து தலைவலி மற்றும் பதற்றம் தலைவலி போன்ற பல்வேறு வகையான தலைவலிகள் உள்ளன. தலைவலி மீண்டும் மீண்டும் நிகழும்போது, ​​நீங்கள் ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதனை ஒரு நல்ல அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம், ஏனெனில் இது ஒரு நோயின் அடிப்படை நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.

தொடர்ச்சியான தலைவலியை ஏற்படுத்தக்கூடிய பொதுவான நிலைமைகள் பின்வருமாறு:

 • உயர் இரத்த அழுத்தம்
 • நோய்த்தொற்றுகள்
 • தற்காலிக தமனி அழற்சி
 • இரத்த நாளங்கள் வீக்கமடையும் போது ஏற்படும் கட்டிகள்

உங்கள் தலைவலிக்கு என்ன காரணம் என்பதை தீர்மானிக்க உங்கள் அறிகுறிகளை நீங்கள் ஒரு மருத்துவ ஆலோசகரிடம் தெரிவிக்க வேண்டும். நீங்கள் ஒற்றைத் தலைவலியை அனுபவிப்பதாக  கண்டறியப்பட்டால், உங்கள் அறிகுறிகளைப் போக்க தகுந்த மருந்துகளை உங்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். உங்கள் நிலை தற்காலிக தமனி அழற்சி போன்ற தீவிரமான அறிகுறியாக கொண்டு இருந்தால், வீக்கத்தைக் குறைக்க ஒரு ஸ்டீராய்டை மருத்துவர் அடிக்கடி பரிந்துரை செய்வார். பார்வை இழப்பு போன்ற சிக்கல்களைத் தவிர்க்க இந்த மருந்துகள் உதவும்.

2.பக்கவாதம்:

ஒவ்வொரு ஆண்டும் 795,000 க்கும் மேற்பட்ட  மக்களை பாதிக்கும்

நோயாக பக்கவாதம் இருக்கிறது. இது தமனிகளால் மூளைக்கு சேதம் ஏற்படுத்தப்படும்போது ஏற்படும். பக்கவாதத்தை எதிர்பார்ப்பது பொதுவாக கடினம், ஆனால் உங்களுக்கு பக்கவாதம் ஏற்படக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் திடீரென ஏற்படலாம், அவை கீழ்க்கண்டவாறு இருக்கலாம்:

 • மங்கலான பார்வை
 • குழப்பம், பேசுவதில்,  புரிந்துகொள்வதில் சிக்கல்
 • தலைச்சுற்றல் அல்லது சமநிலை இழப்பு
 • முகம், கை அல்லது காலில் உணர்வின்மை அல்லது பலவீனம்
 • குறிப்பாக உடலின் ஒரு பக்கத்தில் கடுமையான தலைவலி

பக்கவாதத்தை அனுபவித்தவர்களைப் பார்க்கும்போது, ​​இரண்டாவது பக்கவாதத்தைத் தடுக்க அவர்களுக்கு உதவுவதே மருத்துவர்களின் தலையாய கடமையாக இருக்கும். அதற்காக பெரும்பாலும் மருந்துகளின் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். இதில் எந்தவொரு அடிப்படை இதய பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்க இரத்த உராய்வு மருந்துகள் மற்றும் சில மருந்துகள் அடங்கும். ஆனால் இது உங்கள் குறிப்பிட்ட சூழ்நிலையைப் பொறுத்தே அமைகிறது. ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள், வாரத்தில் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமும், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு முன்னுரிமை அளி்த்தல் மூலமும்,  பதப்படுத்தப்பட்ட உணவை கட்டுப்படுத்தும் மூலமும், ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவதன் மூலமும் உங்களுக்கு ஏற்படும் பக்கவாதத்தின் அபாயத்தைக் குறைக்கலாம்.

இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கிய பக்கவாதம் ஆபத்து காரணிகளைக் கட்டுப்படுத்த உதவும்:

 • நீரிழிவு நோய்
 • இருதய நோய்
 • அதிக ஆல்கஹால் பயன்பாடு
 • உயர் இரத்த அழுத்தம்
 • அதிக கொழுப்புச்ச்த்து
 • உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சியின்மை
 • புகைத்தல்

3.செய்சூர்ஸ்:

செய்சூர்ஸ் என்பது மூளையின் மின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களை குறிக்கிறது. இது வலிப்புத் தாக்கங்கள் என்று தமிழில் அடையாளம் காணப்படுகிறது. இது 100 நபர்களில் ஒருவரை பாதிக்கிறது. இதன் அறிகுறிகளும் உங்கள் நோயின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும், ஆனால் மிகவும் பொதுவானவை:

 • பயம், பதட்டம், அறிவாற்றல் குறைவு  உணர்ச்சி அறிகுறிகள்.
 • உணர்வு அல்லது விழிப்புணர்வு இழப்பு
 • தற்காலிக குழப்பம்
 • கைகள் மற்றும் கால்களின் கட்டுப்பாடற்ற ஜெர்கிங் இயக்கங்கள்

வலிப்புத்தாக்கத்திற்குப் பிறகு, உங்கள் மருத்துவரைப் பார்ப்பது முக்கியம். ஆரம்பகால சிகிச்சையும் மருந்துகளும் உங்கள் வலிப்புத்தாக்கங்களைக் கட்டுப்படுத்தலாம்.

4.பார்கின்சன் நோய்

பார்கின்சன் நோய் என்பது உங்கள் இயக்கத்தை பாதிக்கும் ஒரு முற்போக்கான நரம்பு மண்டல கோளாறு ஆகும். பொதுவாக, இது 60 வயதிற்குட்பட்டவர்களைப் பாதிக்கத் தொடங்குகிறது. மேலும் காலப்போக்கில் இதன் அறிகுறிகள் படிப்படியாக மோசமடைகின்றன. பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

 • மலச்சிக்கல்
 • தசை விறைப்பு
 • குறைந்தளவு வாசனை நுகர்வு
 • கடினமான முகம்
 • பேச்சு மாற்றங்கள்
 • நடுக்கம்.

5.டிமென்ஷியா:

டிமென்ஷியா என்பது ஒரு நோயறிதல் முறையாகும். இது அல்சைமர் உள்ளிட்ட நோய்களின் குழுவை விவரிக்கிறது. இதனால் உங்கள் மூளை செயலிழக்கக்கூடும். இது மூளை திசுக்களின் தொடர்ச்சியான இழப்புக்கு வழிவகுக்கிறது. இவை உங்களின்

 • நடத்தை
 • உணர்ச்சிகள்
 • நினைவு
 • உணர்வுகள்
 • சிந்தனைகள்

ஆகிவற்றை அதிகளவு பாதிக்கலாம்.

நீங்கள் டிமென்ஷியாவின் அறிகுறிகளை அனுபவிப்பதைப் போல உணர்ந்தால், உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு சில மருந்துகள் மற்றும் தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் வாசிக்க : பல் இம்பிளான்ட் முறையில் ஏற்படும் சிக்கல்கள். 

Leave comment