இந்தியாவின் சிறந்த பல் சிகிச்சை மையங்கள்.

பல் பராமரிப்பு என்பது சிறு வயதிலிருந்தே நாம் பெரியவர்களிடமிருந்து தினமும் கற்றுக் கொள்ளும் ஒன்று. எனவே அதனை முறையாக கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். பல் ஆரோக்கியத்தில் கவனம் குறைவாக இருப்பது பற்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உங்களை பாதிப்படைய செய்துவிடும். இந்தியன் ஹெல்த் குரு என்பது ஒரு மருத்துவ மதிப்பு முறைகளை வழங்கும் ஒரு மேம்படுத்தப்பட்ட செயல்முறை ஆகும். இது இந்தியாவில் உள்ள சிறந்த பல் மருத்துவர்கள், இந்தியாவின் சிறந்த பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிறந்த பல் மருத்துவ சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் கண்டறிந்து, அங்கு கிடைக்கப்படும் மேம்பட்ட மற்றும் சிறப்பான சிகிச்சை முறைகளை நாம் பெற பெரிதும் உதவுகிறது. இந்த ஹெல்த் குரு மையம் இதற்காக பல தலை சிறந்த நிபுணர்கள் அடங்கிய குழுவை கொண்டு செயல்படுகிறது.

இந்தியன் ஹெல்த் குரு குழு விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன:

முக்கிய வசதிகள்: மருத்துவ விசா ஏற்பாடு, விமான நிலைய சேவை, தங்குமிடம், உணவு, இந்தியாவின் சிறந்த பல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் தொடர்பு, ஆய்வக சோதனைகள் போன்றவற்றுக்கு இந்த அமைப்பு பெரிதும் உதவுகிறது.

தகுதி வாய்ந்த பல் மருத்துவர்கள்: இந்தியன் ஹெல்த் குரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பட்டியல்களை தன்னகத்தே கொண்டுள்ளது, இது இந்தியாவில் மிகச் சிறந்த சுகாதார சேவையை வழங்குகிறது.

மலிவு விலையில் சிகிச்சை: உலகளவில் உள்ள பல் மருத்துவர்களிடம்
சிகிச்சை பெறுவதை காட்டிலும் இந்தியாவில் பல் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஆகும் முழு பயணத்திற்கும் ஏற்படும் செலவுகள் மிக குறைவாகவே ஏற்படும் என்று இந்த மையம் கூறுகிறது.

நிபுணத்துவம்: சிகிச்சைகள் வழங்குவதில் இந்த மையம் சிறப்பான நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. மேலும் இந்த நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையுடன் பின்பற்றப்படுகின்றன.

பிற சேவைகள்: உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த படி சுகாதார உணவு வழங்குதல், இந்தியாவில் விடுமுறையைத் திட்டமிடுதல், புத்துணர்ச்சி மற்றும் மறுவாழ்வு சேவை போன்ற வசதிகளும் இந்த குழு சிறப்பாக கவனித்து செயல்படுத்தி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பல் நோயாளிகள் இந்தியாவில் குறைந்த செலவில் பல் அறுவை சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளதாக இந்த மையம் கூறுகிறது. இந்தியன் ஹெல்த் குரு மூலம் பல் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு விஜயம் செய்த நோயாளிகள் பலர், இந்தியாவில் சிறப்பான சிகிச்சை முறைகளை பெற்று திருப்தியடைந்துள்ளனர். இங்கு நோயாளிகளின் முக தோற்றம், தோல் தொனி, முடியின் நிறம், பற்களின் தோற்றம் (நிறம், அகலம், நீளம், வடிவம் மற்றும் பல் காட்சி), பல் ஈறு திசு மற்றும் உதடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மிக சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்களின் தனித்துவமான கருத்தாய்வு களை கருத்தில் கொண்டு ஸ்மைல் மேக் ஓவர் சிகிச்சை செய்யப்பட்டதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்கள். இதனால் அவர்களின் புன்னகையின் அழகியல் மேம்பாடு பெற்று அவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அவர்கள் தங்கள் சொந்த நாட்டுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் ஸ்மைல் மேக் ஓவர் அறுவை சிகிச்சை மிகக் குறைந்த செலவில் பெற முடிவதாகவும் கூறுகிறார்கள். மேலும் இந்த சிகிச்சை முறைகளை அவர்கள் பெறுவதற்கு இந்தியன் ஹெல்த் குரு மையம் அவர்களுக்கு பெரிதும் உதவியதாகவும் கூறியுள்ளார்கள்.

இந்தியாவில் சிறந்த பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் யார்?

உங்கள் பற்களை சிறப்பாக கவனித்துக் கொள்வதற்கு வழக்கமான பல் துலக்குதல், பிளாசிங், மற்றும் வாய் கொப்பளித்தல் ஆகிய செயல்பாடுகளை முறையாக செய்தாலும், சில மேம்பட்ட பல் சிகிச்சை முறைகள் மற்றும் ஆலோசனைகள் அதிகமாக தேவைப்படுகிறது. உங்கள் பல் ஆரோக்கியத்தின் ஒவ்வொரு அம்சமும் முறையாக கண்காணிக்கப்படுவதை உறுதி செய்ய பல் மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகள் செய்து கொள்வதும் நல்ல வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

நம் அனைவருக்கும் தன் கடமைகளை நன்கு உணர்ந்த மற்றும் சிறந்த திறமைகளைக் கொண்ட ஒரு நல்ல பல் அறுவை சிகிச்சை நிபுணர் தேடுவது என்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்கும். பல் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களைப் பற்றி நன்கு அறிந்த பல் அறுவை சிகிச்சை நிபுணர்களை நாம் கண்டறிவதில் சிறு குழப்பங்கள் ஏற்படலாம். இதற்காக இந்தியன் ஹெல்த் குரு மையம் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.

சர்வதேச தரத்திற்கு இணையான மிகவும் திறமையான பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பலரை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது. அதனால்தான் யு.கே, யு.எஸ்.ஏ மற்றும் கனடாவைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தங்கள் பல் சிகிச்சைகள் மற்றும் பல் சம்பந்தமான அறுவை சிகிச்சைகளுக்கு இந்தியாவுக்கு வர விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் சிகிச்சைக்காக செலவிடும் தொகையில் பெருமளவில் சேமிக்கிறார்கள். அதே நேரத்தில் மிகவும் தரமான சிகிச்சையையும் பெறுகிறார்கள்.

இந்தியாவின் சிறந்த பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் வல்லுநர்கள் பற்களை வெண்மையாக்குவது, ஸ்மைல் மேக் ஓவர் செய்வது, ஈறு மறுவடிவமைப்பு செய்தல் மற்றும் பல வகையான பல் சிகிச்சை முறைகளை திறம்பட கையாளும் திறன் கொண்டவர்கள்.
இந்திய பல் அறுவை சிகிச்சைகள் உத்தியோகபூர்வ அரசாங்க திட்டங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட உள்ளன என்பதால் உலக அளவில் இதன் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க : நோயாளிகளுக்கு யூரின் பரிசோதனை ஏன் தேவை?

Leave comment